திருவள்ளுவர் சிலைக்கு பூஜை செய்த அர்ஜுன் சம்பத்.. பின்தொடர்ந்து சென்ற போலீஸ்.. வல்லம் அருகே கைது
Recommended Video
சென்னை: பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு போர்த்தியதற்காக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு நாட்கள் முன்பாக, பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது சில மர்ம நபர்கள் சிலர், சாணத்தை வீசிவிட்டு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சாணம் வீசிய விஷமிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று, மாநில அரசுக்கு, திமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். சமூக ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும் இதே கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில், கட்சி, நிர்வாகிகள் குறிப்பிட்ட இந்த திருவள்ளுவர் சிலைக்கு நேற்று பாலாபிஷேகம் செய்து சுத்தப்படுத்தினார். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்திற்கு இன்று திடீரென வந்து தான் மறைத்து வைத்திருந்த ருத்ராட்ச மாலையை திருவள்ளுவர் சிலைக்கு அணிவித்தார். பிறகு காவி துண்டை சிலையின் தோள் பகுதியில் அணிவித்து தீபாராதனை காண்பித்தார்.

பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், அந்த பகுதியில் போலீசார் ஏற்கனவே, தடை உத்தரவு பிறப்பித்திருந்தனர். தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, மலர்மாலை அணிவிக்க மட்டும் போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
ஆனால், அர்ஜுன் சம்பத் திருவள்ளுவருக்கு ருத்ராட்ச மாலை அணிவித்து, காவி துண்டு அணிவித்து பூஜை நடத்தினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கிருந்து கிளம்பிச் சென்ற அர்ஜுன் சம்பத்தை பின்தொடர்ந்தது காவல்துறை. இதனிடையே, வல்லம் பகுதி போலீசார் அர்ஜுன் சம்பத்தை கைது செய்துள்ளனர். போலீசாரின் தடையுத்தரவை மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போலீசார் அர்ஜுன் சம்பத்தை, அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக, அர்ஜுன் சம்பத் அணிவித்த ருத்ராட்சம் மற்றும் காவி துண்டு ஆகியவற்றை போலீசார் அகற்றி விட்டனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications