பால் விலை மீண்டும் உயர்வு.. 1 லிட்டர் ரூ.82-ஐ எட்டுகிறது! தமிழக அரசு தலையிட முகவர் சங்கம் கோரிக்கை!
சென்னை: ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் விலை நாளை முதல் மீண்டும் உயர்கிறது. ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியிருந்த நிலையில், ஹட்சன் நிறுவனத்தின் ஆரோக்கியா பால் மற்றும் தயிரின் விலை நாளை முதல் மீண்டும் உயர்கிறது. இதன் மூலம் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டருக்கு ரூபாய் 82 ஆக உயர்ந்துள்ளது. அரை லிட்டர் பால் 2 ரூபாய் உயர்ந்து 40 ஆக உயர்ந்துள்ளது.

தனியார் பால், தயிர் விலை மீண்டும் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி இந்த விலையேற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பால் கொள்முதல் மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வு எனக்கூறி, ஒவ்வொரு முறையும் பால், தயிர் விற்பனை விலையை தனியார் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. கடந்த டிசம்பரில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 2, நடப்பாண்டு பிப்ரவரியில் லிட்டருக்கு ரூ. 2; தயிர் விற்பனை விலை கிலோவிற்கு ரூ. 5 வரை ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் உயர்த்தின.
ஹட்சன் நிறுவனம் நாளை (14.03.2025) முதல், ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு ரூ. 4, தயிருக்கு கிலோவுக்கு ரூ. 3 வரை உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் ரூ. 80 வரை தொட்டிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால், தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்திற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்களில் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும்.
ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு அதனை தடுத்து நிறுத்துவதோடு, தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை தமிழக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். இதற்கு சிறப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தப்படுகிறது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications