சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உருகிய அற்புதம்மாள்.. நம்பிக்கை கொடுத்த ஸ்டாலின்.. நெகிழ்ச்சியான சந்திப்பு.. விரைவில் நல்ல முடிவு?

Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை நீடிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார். முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் உள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக எழுந்து வரும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்! கொடூரம்.. மும்பை அடுக்குமாடி விபத்து.. ஒரே குடும்பத்தில் 8 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சோகம்!

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 7 தமிழர்களின் விடுதலைக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது வாடிக்கையாகி விட்டது.

7 தமிழர்கள் விடுதலை

7 தமிழர்கள் விடுதலை

7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழ்நாடு அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என கூறியது. இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு, எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்க மறுத்து விட்டார்.

திமுக அரசு பெரும் முயற்சி

திமுக அரசு பெரும் முயற்சி

'எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர்தான் உண்டு' என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறி விட்டார். இதையடுத்து அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஜனாதிபதி இதுவரை இது தொடர்பாக எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. தற்போதைய தி.மு.க அரசும் ஆட்சிக்கு வந்தது முதல் 7 தமிழர்கள் விடுதலைக்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

பிரதமரிடம் பேசுவார்

பிரதமரிடம் பேசுவார்

7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கடிதம் எழுதியுள்ளார். நாளை பிரதமரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாகவும் பேச உள்ளதாக கூறப்படுறது. மேலும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தும் ஸ்டாலின் இது தொடர்பாக பேச உள்ளதாக கூறப்படுறது.

ஸ்டாலினை சந்தித்த அற்புதம்மாள்

ஸ்டாலினை சந்தித்த அற்புதம்மாள்

இப்படி தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சந்தித்து பேசினார். அப்போது பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியதற்காக முதல்வரிடம் நன்றி தெரிவித்த அவர் இந்த பரோலை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்வது குறித்தும் ஸ்டாலினிடம் அற்புதம்மாள் பேசினார்.

முதல்வர் உறுதி

முதல்வர் உறுதி

இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அற்புதம்மாள் கூறுகையில், ' பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன். பேரறிவாளனுக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறுவதால் பரோலை நீடிக்க கோரிக்கை விடுத்தேன். பரோலை நீடிப்பது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், பேரறிவாளனை விடுவிக்கும் எண்ணத்தில் தான் அரசு உள்ளதாகவும் முதல்வர் என்னிடம் தெரிவித்தார் என்று அற்புதம்மாள் கூறினார்.

English summary
Arpudammal meets Chief Minister MK Stalin and demands extension of parole granted to Perarivalan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X