ஒரு தாயின் 30 ஆண்டு கால தவிப்பை.. மக்கள் மன்றத்தில் கூறிய கமலுக்கு அற்புதம்மாள் நன்றி!
சென்னை: தனது பாச போராட்டத்தை பல கோடி பேர் பார்க்கும் தொலைகாட்சியில் கூறிய கமல்ஹாசனுக்கு வணக்கம் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை முடிந்தும் சிறை உள்ள7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல்வாதிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அவர்களை விடுவிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.

இதையடுத்து அவர்களை விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கையெழுத்திட்டால் அந்த 7 பேரும் விடுதலை செய்யப்படுவர்.
குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை...
— Arputham Ammal (@ArputhamAmmal) January 18, 2021
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை...
பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே!
🙏🏻#ReleasePerarivalan pic.twitter.com/aEiTqVPG0k
ஆனால் அவர் இன்னமும் கையெழுத்திடவில்லை. இந்த நிலையில் கமல்ஹாசன் அற்பும்மாள் குறித்து தனது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசினார். அவர் கூறுகையில் தனது மகனுக்காக கால் நூற்றாண்டுகளாக போராடி வருகிறார், அதுவும் ஒரே ஒரு கையெழுத்திற்காக என அற்புதம்மாளின் பாச போராட்டம் குறித்து கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதை அறிந்த அற்புதம்மாள் ட்விட்டரில் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவரத் தனது ட்விட்டரில் கூறுகையில் குற்றமற்ற எனது மகனின் நீதிக்கான 30 ஆண்டுகால தவிப்பை...
ஒரு தாயின் ஏக்கம் மிகுந்த காத்திருப்பை... பலகோடி பேர் காணும் தொலைக்காட்சி இறுதி நிகழ்வில் உலகறிய சொன்ன உங்களுக்கு வணக்கங்கள் திரு.கமல்ஹாசன் அவர்களே! என தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications