மோடி வர்றாரு.. பிரமாண்ட கூட்டம்.. சுத்தமான சாலைகள்.. ஆளுயர கட் அவுட்கள்.. கலர் கலர் கொடிகள்!
பிரதமர் மோடி சென்னை வருவதால் வரவேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
Recommended Video

சென்னை: சுத்தப்படுத்தப்பட்ட சாலைகள், ஆளுயர பேனர்களுக்கு நடுவே கலர் கலர் கட்சி கொடிகள் என சென்னை மாநகரமே களை கட்டி இருக்கிறது.
பிரதமர் மோடி இன்று வருவதால் எல்லா கூட்டணி கட்சிகளுமே படு பிஸியாக உள்ளனர். மோடியை வரவேற்பது, தொண்டர்களை வரவழைப்பது உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
விழா நடக்க போகும் இடமோ அதற்கு மேல் பரபரப்பாக இருக்கிறது. முதலில் பொதுமக்கள் குடிக்க பெரிய டாங்குக்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. பிரதமர் வருவதால் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் போலீசார் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

பூந்தொட்டிகள்
விழா மேடையோ பார்க்கவே செமையாக இருக்கிறது. லைட் மற்றும் டார்க் கிரீன் கலரில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேடையை சுற்றி குட்டி குட்டி பூந்தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது. பார்க்கவே பசுமையாக இருக்கிறதே தவிர 'காவி'யை கொஞ்சம் கூட அங்கு காணோம்.

கட் அவுட்கள்
இது எல்லாவற்றையும்விட ஹைலைட் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள்தான். சும்மா சொல்லக்கூடாது, அறிஞர் அண்ணாவுக்கு மறக்காமல் கட் அவுட் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதோடு சரி.. அடுத்த கட் அவுட்டே முதல்வர் எடப்பாடிக்குதான்.

ஜெயலலிதா
ஜிஆர், ஜெயலலிதா எல்லாம் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. இவர்களுக்கும் கட்சிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லாதது மாதிரி, அண்ணாவுக்கு பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி, அடுத்து துணை முதல்வர், அப்பறம் ராமதாஸ் என்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையா?
இன்னும் தேர்தலே ஆரம்பிக்கவில்லை.. இப்போதே எம்ஜிஆர் ஜெயலலிதா நிலைமை இப்படி என்றால், திரும்பவும் இவர்கள் ஜெயித்து வந்துவிட்டால்?!
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications