அரியர் தேர்வு ரத்து:சூரப்பா பேச்சுக்கு.. அமைச்சர் அன்பழகன் கடும் எதிர்ப்பு..பொய் பரப்புவதாக புகார்!
சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் மாற்றமில்லை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து இன்று அவர் அளித்திருக்கும் பேட்டியில், ''அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை. அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் இருந்து எந்த மின்னஞ்சலும் தமிழக அரசுக்கு அனுப்பவில்லை. அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை, அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது. அப்படி மின்னஞ்சல் வந்திருக்கிறது என்று கூறினால், அதை சூரப்பா வெளியிட வேண்டும்'' என்று தெரிவித்தார்.

பி.இ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பது செல்லாது என்று தனக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்திடம் (ஏஐசிடிஇ) இருந்து மின்னஞ்சல் வந்ததாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து இருந்தார். அந்த மின்னஞ்சலில், அரியர் மாணவர்களுக்கு தேர்வு எழுதிதான் தேர்ச்சி கொடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிவித்து இருந்தார். இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் அமைச்சர் அன்பழகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக மாணவர்கள் கடந்த கல்வியாண்டின் இறுதியில் தேர்வு எழுத முடியவில்லை. இதையடுத்து கல்லூரி இறுதியாண்டு தேர்வு தவிர மற்ற தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது. இத்துடன் அரியர் தேர்வு எழுதுவதற்கு பணம் செலுத்தி இருந்தாலே தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் அறிவித்து இருந்தார். இதற்கு தமிழக முழுவதும் அரியர் வைத்திருந்த மாணவர்களிடம் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. போஸ்டர்கள் அடித்தும் ஒட்டினர்.












Click it and Unblock the Notifications