சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அவருமா?".. முதல்ல எடப்பாடி பழனிசாமியை விடாதீங்க.. பற்ற வைத்த சீனியர்.. திமுக என்ன செய்ய போகிறது?

எடப்பாடி பழனிசாமியையும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க புகழேந்தி வலியுறுத்துகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா ஒருபக்கம் தனிக்கட்சி துவங்க போவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தியின் பேச்சு, எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியை உண்டுபண்ணி வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடங்கியிருந்த நிலையில், திமுக அரியணை ஏறியதையடுத்து, சூடு பிடித்துவிட்டது.

18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?18 நாளில் 5 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்... மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு சிக்கலா? என்ன நடக்கிறது?

சமீபத்தில் ஆறுமுகசாமி ஆணையம் ஓபிஎஸ்ஸிடம் விசாரணை நடத்தியது.. அந்த விசாரணை நாட்களில் ஓபிஎஸ் சொன்ன பெரும்பாலான வார்த்தை "எனக்கு எதுவும் தெரியாது" என்பதுதான்.

 ஆளுநர் - பிரதாப் ரெட்டி

ஆளுநர் - பிரதாப் ரெட்டி

"அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா நன்றாக இருப்பதாக ஒருசில முறை சசிகலா என்னிடம் சொன்னார்.. அதைத்தாண்டி எனக்கு எதுவும் தெரியாது. அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் சொல்லவில்லை.. என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது.,. அப்போதைய ஆளுநர் பிரதாப் ரெட்டியை மட்டும் சந்தித்ததும் எனக்கு நினைவில்லை... CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது" என்றே ஓபிஎஸ் பதில்கள் அமைந்திருந்தன.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

எனினும் இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்காமல் இருக்கிறார்கள் என்று, மூத்த தலைவர் புகழேந்தி விடாமல் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார்.. புகழேந்தியின் வாதம் இதுதான்: "இப்படி ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டதே எடப்பாடி பழனிசாமிதான்.. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, எடப்பாடி பழனிசாமியுடன் நானும்தான் மருத்துவமனையில் இருந்திருக்கிறேன்.. நடந்தவை எல்லாமே எடப்பாடிக்கு நன்றாகவே தெரியும்...

 புகழேந்தி கேள்வி

புகழேந்தி கேள்வி

எடப்பாடி பழனிசாமி ஆணையத்தை அமைக்கும்போது, இந்த ஆணையம் அவசியம் என்பதை அரசு ஆணை மூலம் குறிப்பிட்டுள்ளார். அதனால், அவர் விசாரிக்கப்பட்டால் பல உண்மைகள் வெளிவரும் என்று நம்புகிறேன்.. இது தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திலும் மனு அளித்துள்ளேன். என்னை விசாரணைக்கு அழைத்தாலும் வரத் தயார்" என்பதைதான் அப்போதிருந்து புகழேந்தி சொல்லி வருகிறார்.

 விசாரணை ஆணையம்

விசாரணை ஆணையம்

இதே விஷயத்தைதான் நேற்றைய தினமும் புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, "ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்து இருந்தாலும், உரிய முகாந்திரம் இருந்தால் மறுபடியும் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

 பொதுப்பணித்துறை

பொதுப்பணித்துறை

அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்... 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பான கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றாரா? அப்போது என்ன நடந்தது? என்பன உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகவே ஆணையம் அவரிடம் விசாரிக்க வேண்டும்..

 விளக்கம்

விளக்கம்

ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்த ஓபிஎஸ் இதுவரை முழு உண்மையும் தெரிவிக்கவில்லை... வக்கீலுடன் என்னையும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் மனு கொடுத்து உள்ளேன்" என்று புகழேந்தி கூறினார். புகழேந்தியின் இந்த கோரிக்கையையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது..

 திமுக ஸ்டாலின்

திமுக ஸ்டாலின்

"உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்கிற உண்மையான அக்கறை இருந்திருந்தால், முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்திலேயே மருத்துவ நிபுணர் குழுவையும் போட்டிருப்பார்களே, அப்போதே ஏன் விசாரணை துரிதமாகவில்லை" என்று ஏற்கனவே சிலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி வரும் நிலையில், தற்போது எடப்பாடிக்கு மீண்டும் தலைவலி கூடியுள்ளது. "ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருந்தால் அதை வெளிக்கொண்டு வருவோம்" என்று சொல்லி ஆட்சியை பிடித்த திமுக இந்த விஷயத்தில் இனி என்ன செய்ய போகிறது? எத்தகைய முடிவை எடுக்க போகிறது என்பதும் இனிமேல் தெரியவரும்.

English summary
Arumugasamy commission should also immediately investigate Edappadi Palanisamy, asks bengalore pugazhendi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X