கனவில் மண் அள்ளிப்போட்டுட்டாங்களே.. எடப்பாடி மீது "சந்தேகப்பட்ட" மோடி? ஓபிஎஸ் குஜராத் செல்வது ஏன்?
சென்னை: குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஒன்இந்தியாவிற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்திருந்த பேட்டியில், ஓ பன்னீர்செல்வம் குஜராத் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறி இருந்த நிலையில், அதன்படியே குஜராத் செல்ல ஓ பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது,
அதிமுக உட்கட்சி மோதல் நடக்கும் நிலையில், சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. இதை பற்றி ஆலோசனை செய்ய பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்று இருந்தார்.
இந்த நிகழ்விற்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்டது தொடர்பாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி வேணும் என்பதுதான் பாஜகவின் நோக்கம். ஆனால் எடப்பாடி மட்டும் போதும் என்று பாஜக நினைக்கவில்லை. அவர் ஒருவர் மட்டுமே போதும் என்று பாஜக நினைக்கவில்லை. எடப்பாடி கழற்றிவிட்டு செல்வதில் மாஸ்டர்.

எடப்பாடி வேண்டும்
அவர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிட்டுவிட்டு செல்வார். அது பாஜகவிற்கும் தெரியும். மோடியை எடப்பாடி ஒரு காலத்தில் கழற்றிவிடுவார். அதுதான் என் கருத்து. எடப்பாடி மீது மோடிக்கு சந்தேகம் இருக்கிறது. நம்மை கழற்றிவிட்டுவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது. பாஜகவை எடப்பாடி கழற்றிவிட பார்க்கிறார் என்ற சந்தேகம் எடப்பாடி மீது மோடிக்கு உள்ளது. ஆனால் எடப்பாடியை காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளும் கூட்டணிக்கு சேர்த்துக்கொள்ளாது. இதனால் மீண்டும் பாஜக கூட்டணிக்கு எடப்பாடி வந்துதான் ஆக வேண்டும்.எடப்பாடி முக்கியம்தான். ஆனால் எடப்பாடி மட்டுமே முக்கியம் என்று பாஜக நினைக்காது. ஏனென்றால் அவருக்கு பெரிய வாக்கு வாங்கி இல்லை.

அழைப்பு
குஜராத்தில் பாஜக வென்றபின், ஒருவேளை பதவி ஏற்பு விழாவிற்கு பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது என்றால் என்ன செய்வீர்கள்? அமித் ஷா ஒருவேளை பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள்? பன்னீர்செல்வம் முக்கியமான தலைவர்.. அவர் முன்னாள் முதல்வர் என்று அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள்?, என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவர் சொன்னது போலவே ஓ பன்னீர்செல்வத்தை பாஜக குஜராத்திற்கு அழைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை
நாளை அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இதற்காக ஓ பன்னீர்செல்வம் இன்று இரவு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி அழைக்கப்பட்ட போது, அவரை டெல்லி பாஜக ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. அதாவது ஒற்றை தலைமையை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது ஓ பன்னீர்செல்வத்தை குஜராத் அழைக்க பாஜக முடிவு செய்துள்ளது. இதன் அர்த்தம் இரண்டு தலைவர்களும் எங்களுக்கும் முக்கியம் என்பதை பாஜக சொல்லாமல் சொல்லி இருக்கிறது என்கிறார்கள்.

எடப்பாடி டெல்லி
சமீபத்தில் தமிழ்நாடு வந்த மோடி எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் இருவரையும் ஒன்றாக சந்தித்தார். இரண்டு தலைவர்களும் எங்களுக்கு முக்கியம் என்பதை உணர்த்த மோடி இப்படி செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இரண்டு தலைவர்களும் முக்கியம் என்பதை உணர்த்துவதற்காக எடப்பாடியை டெல்லி அழைத்துவிட்டு, ஓ பன்னீர்செல்வத்தை குஜராத் அழைக்க பாஜக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி டெல்லி சென்ற போது, அவரின் தரப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் சந்தோஷத்தில் மண் அள்ளி போடும் விதமாக ஓ பன்னீர்செல்வம் குஜராத் செல்லும் செய்தி வெளியாகி உள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications