இதெல்லாம் ராஜ யோகம்! வீட்டு லோன் இருக்கா? இதைவிட பெரிய நல்ல செய்தி கிடைக்காது.. சிலிர்க்குதே
சென்னை: வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பலரும் எதிர்பார்த்த அறிவிப்பு வந்த நிலையில் வேறு ஒரு விஷயமும் மக்களுக்கு சாதகமாக மாறி உள்ளது. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது.
அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் ஆர்பிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இதன் மூலம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து வெளிப்புற அளவுகோல் கடன் விகிதங்களும் (EBLR) குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கார், வீடு லோன்களின் EMI குறையும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ரெப்போ வட்டி விகிதம் 6.5%லிருந்து 6.25%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 0.25% வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 11 முறை இதில் மாற்றம் செய்யப்படாத நிலையில் தற்போது குறைக்கப்பட்டிருக்கிறது மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது
இதெல்லாம் ராஜ யோகம்!
பொதுவாக ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி வங்கிதான் முடிவு எடுக்கும். அதாவது உங்களிடம் கேள்வி கேட்காமல் அவர்கள் முடிவு எடுத்து உங்களிடம் தெரிவிப்பார்கள்.
லோன் அடுத்தவர்களுக்கு இதில் குரல் எதுவும் கிடையாது. அவர்கள் முடிவு எதையும் எடுக்க முடியாது. அதன்படி இனிமேல், உங்களது ஒப்புதல் இல்லாமல் இதில் மாற்றங்களை செய்ய முடியாது. வீட்டுக்கடன் காலத்தை அல்லது EMI ஐ வங்கிகள் மாற்ற முடியாது. இதில் வங்கிகள் - லோன் வாங்கியவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.
அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வறுபுறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்த்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்த்திக்கொள்ளலாம்.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.
எப்படி நிர்ணயம் செய்யப்படும்
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும்.
இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ காட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான்.
ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications