நெருங்கும் தேர்தல்! திமுக+விசிக, பாஜக+பாமக.. வேட்புமனு தாக்கல் செய்ய முந்தும் வேட்பாளர்கள்!
சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே, இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்த வரையில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. திமுகவை பொறுத்த அளவில், 21 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியுள்ளது.

தென் சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
வட சென்னை - கலாநிதி வீராசாமி
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர் பாலு
காஞ்சிபுரம் - செல்வம்
வேலூர் - கதிர் ஆனந்த்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
திருவண்ணாமலை - சி.என் அண்ணாதுரை
ஆரணி - தரணி வேந்தன்
கள்ளக்குறிச்சி - மலையரசன்
தருமபுரி - ஆர். மணி
கோவை - கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி - ஈஸ்வர சாமி
சேலம் - செல்வ கணபதி
ஈரோடு - பிரகாஷ்
நீலகிரி - ஆ ராசா
தஞ்சாவூர் - ச.முரசொலி
பெரம்பலூர் - அருண் நேரு
தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
தென்காசி - ராணி ஸ்ரீகுமார்
தூத்துக்குடி - கனிமொழி
ஆகிய தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. இந்நிலையில், சென்னையில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதாவது, தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் காலை 11 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதேபோல வடசென்னை வேட்பாளர் கலாநிதி வீராசாமி மதியம் 12 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்ய இருந்த நிலையில், அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெய்குமாருக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டது. எனவே இரு தரப்பினரும் வேட்புமனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர விசிக வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். விசிக 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதாவது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவரும் இந்த தொகுதியின் சிட்டிங் எம்பியாவார்கள். இந்நிலையில் இருவரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல பாமக வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர். பாமக சார்பில்
திண்டுக்கல் - திலகபாமா
அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு,
ஆரணி - முனைவர் அ.கணேஷ் குமார்
கடலூர் - திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான்
மயிலாடுதுறை - ஸ்டாலின்,
கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ் உடையார்
தருமபுரி - சௌமியா அன்புமணி
சேலம் - ந. அண்ணாதுரை
விழுப்புரம் - முரளி சங்கர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வார்கள் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இது தவிர, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications