ஏன் இப்படி ஆடுனீங்க? அந்த 2 பேரை விட்டு விளாசிய ரோஹித்! டிரெஸ்ஸிங் ரூமில் பரபர சம்பவம்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் இருவரும் சரியாக ஆடவில்லை.

நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசிய கோப்பை 2022 சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.

அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரு பால் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

வீரர்கள்

வீரர்கள்

நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரர்கள் ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் இருவரும் சரியாக ஆடவில்லை. பண்ட் லெப்ட் ஹேண்ட் என்பதால் அவரை அணியில் எடுத்து இருந்தனர். இவருக்காக நேற்று தினேஷ் கார்த்திக் உட்கார வைக்கப்பட்டார். ஆனால் பண்ட் வந்த வேகத்தில் 12 பந்தில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் அவுட்டான விதம் மிக மோசமாக இருந்தது. தேவையில்லாமல் திரும்பி, ஸ்வைப் அடிக்க முயன்று பில்டர் கையில் பந்தை கொடுத்தார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த ஷாட்டை அவர் பொதுவாக அதிகம் ஆட மாட்டார். ஆனால் நேற்று திடீரென அவர் ஆடி விக்கெட்டை கொடுத்தார். இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்டியாவும் ஹாஸ்னேயின் பந்தில் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரும் பீல்டர் இருப்பதை பார்க்காமல் அப்படியே பேட்டை சுற்றினார். இவர்கள் இருவரும் அவுட் ஆனதால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரிந்தது. இந்திய அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

 டிரெஸ்ஸிங்

டிரெஸ்ஸிங்

இந்த நிலையில்தான் டிரெஸ்ஸிங் ரூமில் பாண்டியா, பண்ட் இருவரிடமும் ரோஹித் சர்மா கோபமாக வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. திட்டுவது போல ரோஹித் சர்மா கோபமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஏன் இப்படி ஆடுனீங்க.. ஏன் இந்த ஷாட்டை ஆடுனீங்க என்று ரோஹித் சர்மா கேட்பது போல இந்த காட்சிகள் உள்ளன. இந்த காட்சிகள் நேற்று டிவியில் காட்டப்பட்டது. அதேபோல் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இதில் பண்டும் தான் ஆடிய விதம் குறித்து விளக்கி இருக்கிறார். ஏன் இந்த ஷாட்டை அவர் ஆடினார் என்பது பற்றி அவர் விளக்குவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்திய அணியில் பண்ட் - தினேஷ் கார்த்திக் இடையே கடுமையான போட்டி உள்ளது. இதில் பண்ட் பொறுப்பின்றி ஆடுவதால் அவருக்கு அவ்வப்போது வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இந்த நிலையில்தான் நேற்று கிடைத்த வாய்ப்பையும் பண்ட் சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தவறவிட்டுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+