தெலுங்கானா முதல் ம.பி. வரை! பரபரக்கும் களம்.. நொடிக்கு நொடி தேர்தல் முடிவுகள் உங்கள் ஒன் இந்தியாவில்
சென்னை: தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. துல்லியமான தேர்தல் முடிவுகளை நாளை காலை முதலே ஒன் இந்தியா தளத்தில் பெறலாம்.
லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இப்போது 5 மாநில தேர்தல் நடைபெற்றுள்ளது. லோக்சபா தேர்தலை வெற்றியுடன் அணுக வேண்டும் என்றே அனைத்து கட்சிகளின் விருப்பமாக இருக்கும் நிலையில், இந்த 5 மாநில தேர்தலில் கடும் போட்டி நிலவியது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 சட்டசபைகளின் பதவிக்காலம் டிச. 2023 முதல் ஜன. 2024 வரையிலான காலத்தில் நிறைவடைகிறது. இதனால் இந்த 5 மாநிலங்களில் கடந்த நவம்பர் 7 முதல் நவம்பர் 30 தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன.
களம் எப்படி: இதில் தெலுங்கானா மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 119 இடங்கள் இருக்கிறது.. பெரும்பான்மைக்கு 60 இடங்கள் தேவை.. அங்கே கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில், 3ஆவது முறையாக வெல்லும் நோக்கில் பிஆர்எஸ் களமிறங்குகிறது. அங்கே காங்கிரஸ் கடும் போட்டியை கொடுத்து வருகிறது. இது தவிர பாஜக, மஜ்லிஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கிறது.

அடுத்து மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்கே 230 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. ம.பி-இல் ஆளும் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் தான் முக்கிய போட்டி. இந்த முறை முதலில் காங்கிரசுக்கு சாதகமான சூழல் அங்கே நிலவிய போதிலும், இறுதியில் பாஜக தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியது. அதற்கு நல்ல பலன் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இதனால் அங்கே கடும் போட்டி இருக்கிறது. இவை தவிர பகுஜுன் சமாஜ், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் போட்டியிடுகின்றனர்.
கடும் போட்டி: அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட காங்கிரஸ் பாஜக தான் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தானில் 200 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை. அங்கே ஒரு கட்சி ஆட்சியைத் தக்க வைத்துப் பல தேர்தல்கள் ஆகிவிட்டது. இதுவரை மாறி மாறியே இரு கட்சிகளும் ஆட்சியைப் பிடித்து வந்துள்ள நிலையில், இந்த முறை என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும். காங்., பாஜக தவிர பகுஜுன் சமாஜ், ராஷ்டிரிய லோக்தந்திரிக், ஆம் ஆத்மி கட்சிகளும் களத்தில் உள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 46 சீட்கள் தேவை. புபேஷ் பாகல் தலைமையிலான அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. இது தவிர பகுஜுன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் அங்கே ஆட்சியில் உள்ளன.

மேலும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் இப்போது தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 40 இடங்கள் இருக்கும் நிலையில், 21 இடங்கள் பெரும்பான்மைக்குத் தேவை. அங்கு மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளுக்கு இடையே தான் கடும் இருக்கிறது. அங்கே தொங்கு சட்டசபை அமைந்தால் காங்கிரஸ் கிங் மேக்கராக மாறும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தேர்தல் முடிவுகள்: மிசோரமில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருந்த நிலையில், அது திங்கள்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மற்ற 4 மாநில தேர்தல் முடிவுகள் நாளை காலை வெளியாக உள்ளது. துல்லியமான தேர்தல் முடிவுகளை நாளை காலை முதலே ஒன் இந்தியா தளத்தில் பெறலாம்.
உங்கள் ஒன்இந்தியா தமிழ் தளத்தில் லைவ் பேஜ், லைவ் வீடியோ விவாதங்கள், தேர்தல் முடிவுகளைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள், தேர்தல் ட்ரெண்ட் அடிப்படையிலான விரிவான கவரேஜ், தேர்தல் முடிவுகளை விரிவாக அலசும் கட்டுரைகள் இடம் பெறும். சமூக வலைத்தளங்களிலும் உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படும். இணைந்திருக்க மறவாதீர்கள்.












Click it and Unblock the Notifications