நடிகராகும் யோகும் யாருக்கு... மீடியா துறையில் உங்கள் பிள்ளை சாதிக்க முடியுமா? ஜாதகம் சொல்வதென்ன

நமது பிள்ளைகளுக்கு என்ன திறமையிருக்கிறது என்ன படிக்க வைத்தால் ஜெயிப்பார்கள் என்பதைப்பார்த்து அதற்கேற்ப கல்வியைத் தேர்ந்தெடுத்து படிக்க வைக்க வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொறியியல் படித்தவர்களும், டாக்டருக்கு படித்தவர்களும் இன்றைக்கு நடிகராகவோ, ஊடகத்துறையில் சிறந்த செய்தியாளராகவோ ஜொலிக்கிறார்கள். ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளைப் பொறுத்து அதற்கேற்ப படிக்க வைத்தால் பிள்ளைகள் சாதனையாளராகத் திகழ்வார்கள். ஒருவரின் ஜாதகத்தில் ராகு உள்ள நிலை ராகு எந்த கிரகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது என்பதைப் பார்த்து சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம் படிப்பு படிக்கலாம். கேதுவின் நிலையைக் கொண்டு மருத்துவம், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கலாம்.

நம் ஜாதக அமைப்பில் எந்த கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன என்பதைக் கொண்டு, நமக்கு எந்த உயர்கல்வி அமையும் என்பதை தெரிந்துகொள்ளலாம். சூரியன் சாதகமாக இருந்தால் நிர்வாக படிப்புகள், எம்பிஏ, தத்துவ பாடங்கள் படிக்கலாம். சந்திரன் சாதகமாக இருந்தால் மருத்துவம், கெமிக்கல், தண்ணீர், கப்பல் சார்ந்த படிப்புகள் படிக்கலாம். செவ்வாய் சாதகமாக அமைந்திருந்தால் அறுவை சிகிச்சை, விவசாய படிப்பு, சிவில் இன்ஜினியரிங் படிக்கலாம். புத்திநாதன் புதன் சாதகமாக இருந்தால் கணக்கு, வங்கி, ஆடிட்டர், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கலாம். குரு பகவான் சாதகமாக இருந்தால் இலக்கியம், வானியல், சட்டம், ஆசிரியருக்கு படிக்கலாம். சனி சாதகமாக இருந்தல் வரலாறு, கனிமங்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
படிக்கலாம். ராகு சாதகமாக இருந்தால் சினிமா, மீடியா, சித்தா ஆயுர்வேத மருத்துவம், டெக்னிக்கல் துறையில் ஜெயிக்கலாம். கேது சாதகமாக இருந்தால் மருத்துவம், சாத்திர படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள்

ஐந்தாம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் நின்றாலோ - ஜாதகனுக்கு அரசியல் ஞானம் உடையவனாக இருப்பான் சிறந்த அறிவு படைத்தவனாக இருப்பான். ஐந்தாமிடத்தில் சந்திரன் நின்றாலோ ஜாதகனுக்கு நல்ல கற்பனை வளம், கலை இலக்கியத்தில் ஆர்வம்,சிறந்த ஓவிய திறமை, காதல் ஆர்வம் இருக்கும், ஐந்தாமிடத்தில் செவ்வாய் நின்றாலோ ஜாதகனுக்கு மந்திர வித்தை, விளையாட்டு தந்திரங்கள், மல்யுத்தஆர்வம், சிலம்பாட்ட ஆர்வம், அணைத்து விளையாட்டில் யுக்தியுடன் செயல்படுவார். ஐந்தாமிடத்தில் புதன் நின்றாலோ ஜாதகன் மிகுந்த அறிவுடன் செயல்படுவார், கவி பாடும் திறமை இருக்கும், காதல் இருக்கும்,ஐந்தாமிடத்தில் சுக்கிரன் நின்றாலோ ஜாதகனுக்கு பணம் சம்பாதிக்கும் திறமை இருக்கும், நிதி நிர்வாகம் சிறப்புடன் இருக்கும்,காதல் எண்ணம் அதிகம் இருக்கும், ஆடல்,பாடல், பொழுதுபோக்கு விசயங்களில் ஜாதகனுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். ஐந்தாமிடத்தில் குரு நின்றாலோ ஜாதகனுக்கு ஒழுக்கம் அதிகம் இருக்கும், வேத சாஸ்திரத்தில் ஈடுபாடு இருக்கும். ஐந்தாமிடத்தில் சனி நின்றாலோ ஜாதகனுக்கு சிறந்த தொழில் நுணுக்கம் ஏற்படும், அறிவு மந்தமாக செயல்படும், விளையாட்டு விசயத்தில் ஆர்வம் இருக்காது.

ஜாதக அமைப்பு உள்ளதா

ஜாதக அமைப்பு உள்ளதா

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் செய்தாலும் இன்றைக்கு சில ஆயிரம் பேர் மட்டுமே டாக்டர் படிப்பு படிக்க முடிகிறது. இதற்குக் காரணம் அவர்களின் ஜாதக அமைப்புதான். இப்போது நீட் தேர்வு வேறு பலரது டாக்டர் கனவை பாதித்துள்ளது. எனவே டாக்டராகும் அம்சத்தோடு தமது குழந்தை பிறந்துள்ளார்களா என்பதை அறிந்து அந்த படிப்பில் வழி நடத்தலாம். பொறியியல் கல்லூரிகள் பல்லாயிரக்கணக்கில் பெருகி உள்ளன. லட்சக்கணக்கான மாணவர்கள் இன்ஜினியருக்கு படித்து வெளியே வந்தாலும் நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்து பொறியாளராக சாதிக்க எல்லோராலும் முடிவதில்லை எனவே பொறியியல் துறைக்கு ஏற்ற ஜாதக அமைப்பு உள்ளதா என்பதை அறிந்து படிக்க வைக்க வேண்டியது அவசியம்.

செவ்வாய் பார்த்தால் வக்கீல்

செவ்வாய் பார்த்தால் வக்கீல்

சட்ட படிப்புக்கு அஸ்திவாரமே லக்னம், லக்னாதிபதி, 2-ம் இடம், 2-ம் அதிபதி, இந்த ஸ்தானம் பலமாக இருப்பது அவசியம். வாக்குகாரகன் செவ்வாய் லக்னத்தையோ, ராசியையோ பார்ப்பது நல்ல அம்சமாகும், இரண்டாம் இடத்தை பார்ப்பது சிறப்பாகும். பிறந்ததேதி, கூட்டு எண் 1,10,19,28, 3,12,21,30, 8,17,26, 9,18,27 ஆகியவை சாதகமானவை. கார்த்திகை, உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்கள் சிறப்பானவை. புதன், குரு லக்னத்தையும் வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பது அவசியமாகும். அதன் காரணமாக வாதத் திறமை மேம்படும்.

சினிமா துறையில் ஜெயிப்பது எப்படி

சினிமா துறையில் ஜெயிப்பது எப்படி

சினிமா டைரக்டர், கேமராமேன், எடிட்டிங், சவுண்ட் இன்ஜினியர் ஆகிய துறைக்கு செல்ல பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்கள் ஏற்றவர்கள். பிறந்த தேதி, கூட்டு எண் 1,10,19,28, 4,13,22,31, 6,15,24, 2,11,20,29 ஆகியவை சாதகமானது. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அரசு சம்பந்தமான அதிகார பதவியில் அமர்வதற்கு சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களின் பலம் அவசியம் தேவை.

எந்த ராசிக்காரர்கள் யோகக்காரர்கள்

எந்த ராசிக்காரர்கள் யோகக்காரர்கள்

மேஷ லக்னம் மேஷ ராசி, மிதுன லக்னம், மிதுன ராசி, கடக லக்னம், கடக ராசி, சிம்ம லக்னம், சிம்ம ராசி, விருச்சிக லக்னம், விருச்சிக ராசி ஆகியவை முதல்தர யோகம் உள்ளவை. சமையல் கலை படிப்பதற்கு சூரியன், சந்திரன், செவ்வாய் சாதகமாக இருப்பது அவசியம். 1,10,19,28, 2,11,20,29, 9,18,27, 4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறப்பது சாதகமானது. கார்த்திகை, உத்திரம் உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் பிரகாசமானவை. லக்னத்துக்கு 10ஆம் வீட்டில் செவ்வாய் இருப்பது, பார்ப்பது நல்ல அம்சம்.

 ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு

ஆசிரியர் ஆகும் யோகம் யாருக்கு

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவை சாதகமானவை. புதன் லக்னாதிபதியுடன் சேர்ந்தால் கணக்கு ஆசிரியர் ஆகலாம். புதன் சுக்கிரன் சம்பந்தம் இருந்தால் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகலாம். புதன் செவ்வாய் சம்பந்தம் இருந்தால் கம்ப்யூட்டர் ஆசிரியராகும் யோகம் உண்டு. சூரியன், சந்திரன் இருந்தால் கல்லூரி பேராசிரியர், எழுத்தாளர் ஆகலாம். சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் - குரு இருப்பது 'வித்யா கெஜகேசரி யோகம்' எனப்படும். இது இருந்தால் நாம் விரும்புகிற உயர்கல்வியை பெற்று அதில் சாதிக்க முடியும்.

டாக்டராகும் யோகம்

டாக்டராகும் யோகம்

டாக்டருக்கு படிக்கவும், மருத்துவராக தொழில்கள் செய்யவும் மருத்துவ கிரகமான கேது பகவான் அருள் வேண்டும். லக்னத்துக்கு 4,9,10 ஆகிய இடங்களில் மருத்துவ கிரகமான கேது இருப்பது நல்ல யோகம். கேதுவுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்களின் தொடர்பு இருப்பது முதல்தர யோகம். எண் கணித அமைப்பில் பிறந்த தேதி அல்லது கூட்டு எண் 1,2,7,9 என அமைவது சிறப்பு. அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறப்பது மருத்துவர் ஆகும் யோகத்தை அளிக்கும்

 இன்ஜினியர் ஆகும் யோகம்

இன்ஜினியர் ஆகும் யோகம்

பொறியியல் பட்டதாரி ஆவதற்கு பிரகாசமான தேதி, கூட்டு எண்கள் 5,14,23, 8,17,26, 9,18,27 ஆகியவை. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி, பரணி, பூரம், பூராடம் ஆகியவை பொறியியல் படிக்க சாதகமான நட்சத்திரங்கள். கம்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி படித்து தகவல் தொழில் நுட்பத்துறையில் சாதிக்க லக்னாதிபதி பலம் மிகவும் அவசியம். லக்னம், 4,9,10 ஆகிய இடங்களில் ராகு இருப்பது நலம் தரும். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் சாதகமானவை. நான்காம் அதிபதியுடன் புதன் - ராகு சேர்க்கை பெறுவது நல்ல அம்சமாகும். புதன் லக்னம், 4,5,7,9,10 ஆகிய இடங்களில் இருப்பது மிகப்பெரிய பலமாகும். பிறந்த தேதி - கூட்டு எண் ஆகியவை 1,10,19,28, 2,11,20,29, 5,14,23, 6,15,24 என இருப்பது சாதகமானதாகும்.

எந்த நட்சத்திரம் ஆடிட்டர் ஆக ஏற்றது

எந்த நட்சத்திரம் ஆடிட்டர் ஆக ஏற்றது

கணக்கு சம்பந்தமான படிப்புகள், ஆடிட்டிங் படிப்பு, பி.காம், எம்.காம், அக்கவுன்டன்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற லக்னம், லக்னாதிபதி சந்திரன் ஆகியவை பலம் பெறவேண்டும். சூரியன், புதன் சேர்ந்து லக்னம், 2,4,9,10 ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு. அஸ்வினி, மகம், மூலம், ஆயில்யம், கேட்டை, ரேவதி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை சாதகமானவை. பிறந்த தேதி மற்றும் கூட்டு எண்: 5,14,23, 4,13,22, 6,15,24, 1,10,19,28 ஆகியவை யோகமானவை. எனவே உங்கள் நட்சத்திரம் எண்களின் கூட்டுத்தொகை கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி ஆகியவைகளை அறிந்து உங்களுக்கான துறையை தேர்வு செய்து சாதனை புரியுங்கள்.

கல்வித்தடை நீங்கும் பரிகாரங்கள்

கல்வித்தடை நீங்கும் பரிகாரங்கள்

கல்வியில் தடை, தடங்கல், தோல்விகள் ஏற்படுவதற்கும் கிரக திசா புக்திகள், கோச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச்ச கிரக திசாபுக்திகளும், 6, 8, 12 ஆகிய கிரக திசை புக்திகளும், பலம் குறைந்த நீச்ச கிரக சேர்க்கை பெற்ற ராகு-கேது திசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். செங்கல்பட்டு அருகில் உள்ள செட்டிபுண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவ தலங்கள். இங்கு சென்று வழிபட்டால் கல்வித் தடைகள் நீங்கும். புதன்கிழமையும், திருவோண நட்சத்திரமும் சேரும் தினத்தில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். திருக்கடையூர் அபிராமி அம்மனை தரிசித்து பிரார்த்திக்கலாம். தினமும் காலையில் விநாயகர் அகவல் படித்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். ஞானத்தையும், பல்வேறு கலை, கல்விகளில் தேர்ச்சியையும், அறிவாற்றலையும் அருளும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையன்று வணங்கலாம். கல்வி, வித்தை அருளும் புதன் பகவானை வணங்கலாம். கல்விக் கடவுளாம் சரஸ்வதியை வணங்குவது நல்ல பலன் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+