60 ஆண்டு கால கனவு நனவானதே! அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல நாள் கனவு இன்று நிறைவேற போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை இதுவாகும். கடந்த 2018ஆம் ஆண்டு இந்த திட்டம் ரூ 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. தற்போது ரூ 1,916 கோடியில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்றது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக இந்த திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை இருந்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வராக ஜெயலலிதா இருந்த போது ஆய்வு பணிகளுக்கு ஆரம்ப கட்ட நிதியாக ரூ 3.27 கோடி ஒதுக்கப்பட்டது.
அவிநாசியில் 2017ஆம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பின்னர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ரூ 250 கோடி ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து 1,065 கி.மீட்டருக்கு ராட்சத குழாய் வாயிலாக நீரை பம்ப் செய்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் பவானி ஆற்றில் விடும் வகையில் இநத திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1.50 டிஎம்சி நீர் , குழாயில் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதற்காக பவானி, நல்லக்கவுண்டம்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டியிருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த போதும் அத்திக்கடவு- அவிநாசி திட்டப் பணிகள் தொடர்ந்தன. நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் காரணமாக திட்டம் தொடங்குவது தாமதமாகிக் கொண்டே சென்றது.
பணிகள் முடிந்தும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை இருந்தது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட பிறகு உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications