மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட.. ஹோட்டல் ஊழியருக்கு அரிவாள் வெட்டு.. பரபரப்பு சி.சி.டி.வி காட்சி!
சென்னை: உணவகத்தில் மது அருந்தியவரை தட்டிக்கேட்ட உணவக ஊழியரை மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை முனிச்சாலை பகுதியில் துர்கா என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த வாசுதேவன், வசந்தன், சதிஸ், செல்வகுமார் ஆகிய 4 பேரும் இந்த உணவகத்துக்கு சாப்பிட வந்துள்ளனர். இதனையடுத்து உணவகத்திற்குள் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அரிவாள் வெட்டு
அப்போது உணவகத்தின் ஊழியர் ''எங்கள் உணவகத்தில் மது அருந்தக்கூடாது. உணவகத்தில் சாப்பிட மட்டுமே வேண்டும்'' என்று அவரிடம் கூறினார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் ஆத்திரமடைந்த நான்கு பேரும் உணவக ஊழியரான முனீஸ்வரன் என்பவரை வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர் பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச்சென்றது.

4 பேர் கைது
இதில் படுகாயமடைந்த உணவக ஊழியர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் காவல்துறை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள்
உணவக ஊழியரை கும்பல் அரிவாளால் வெட்டும் நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் இதுபோல் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பட்டபகலில். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் சமூக விரோதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். எனவே காவல்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மது என்னும் அரக்கன்
மது என்னும் அரக்கன் தந்தையின் உயிரை பறித்து மகனை கொலைகாரனாக்கி உள்ளது. தமிழகத்தில் மதுபோதையில் இதுபோல் குற்றச் செயல்கள் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மதுக்கடைகளை பாதியளவு குறைக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications