ஆட்டோ, டாக்ஸிகளுக்கு மீட்டர் கட்டணம் உயர்கிறது.. விரைவில் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்
சென்னை: ஆட்டோ கட்டணம் விரைவில் உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்த அறிவிப்பும் முறைப்படி வெளியாக போவதாக கூறுகிறார்கள்.
தமிழகத்தில் 2013ம் ஆண்டில் வாடகை ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் என்றிருந்தது.
மேலும், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்திற்கு 3 ரூபாய் 50 காசுகள் எனவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

விலைவாசி உயர்வு: எனினும், விலைவாசி உயர்ந்ததால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் ஏற்கவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுந்து வந்தது.. அதே சமயம் ஓலா, உபேர் உள்ளிட்ட தனியார் செயலி வழி நிறுவனங்கள் ஆட்டோக்களை இயக்கின. இப்போது, 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் இத்தகைய செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன.
இதை பயன்படுத்தி செயலி நிறுவனங்கள் டிரைவர்களிடம் அதிக கமிஷன் வசூலித்து வருவதாக திடீர் குற்றச்சாட்டு எழுந்தது.. அதேபோல, சிஎன்ஜி எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில், அப்போதும் ஆட்டோ, டாக்சி நிறுவனங்கள் அதிக கட்டணங்களை உயர்த்தியதாக புகார் எழுந்தது.
கட்டணம் உயர்வு: இதற்கெல்லாம் காரணம், தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணம், 2013-க்கு பிறகு மாற்றி அமைக்கப்படவில்லை, அதனால்தான் கட்டணம் அதிகமாகிறது என்றும் சில காரணங்கள் சொல்லப்பட்டன.
இதற்கு பிறகு, கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த வருடம், மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. அதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாததால், கட்டணத்தை மாற்றி அமைக்கவும், அரசே ஆட்டோ செயலி கோரியும் ஆட்டோ டிரைவர்கள் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.
உள்துறை செயலாளர்: இறுதியாக, தலைமை செயலகத்தில் உள்துறைச் செயலர் அமுதா, ஆட்டோ, டாக்சி தொழிலாளர் சங்க தலைவர் கபாலி, பொதுச்செயலர் பாலசுப்பிரமணியம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் சொன்னதாவது:

ஆட்டோ கட்டண உயர்வு, செயலி துவங்குவது தொடர்பான கோப்புகள் முதலமைச்சரின் பரிசீலனையில் உள்ளன. எனவே, கட்டண உயர்வு, செயலி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று உள்துறை செயலாளர் உறுதியளித்துள்ளார்... தொழிலாளர் வாரியத்தில் அனைத்து முறைசாரா தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து, செயலி கொண்டு வருவது தொடர்பாக 2 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளனர்.
விரைவில் அறிவிப்பு: இதனை சுட்டிக்காட்டி, மோட்டார் தொழில் வேறு, பிற முறைசாரா தொழில்கள் வேறு என்பதால், ஆட்டோவுக்ககென தனியாக செயலி துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இந்த கோரிக்கை குறித்தும், போக்குவரத்து தொழிலாளர் செயலர்களுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக, உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்" என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications