பின்னால் வந்து மோதிய லாரி.. நொறுங்கிய கார்! விபத்தில் சிக்கிய ஆவடி போலீஸ் கமிஷனர் நிலை என்ன?
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே போக்குவரத்து நெரிசலில் நின்று கொண்டிருந்த ஆவடி காவல் ஆணையர் காரின் மீது பின்னால் நின்ற லாரி மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் வரும் 19 ஆம் தேதி முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்குதல், முடிவுற்ற திட்டங்களை தொடங்குதல், முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் என பல்வேறு பணிகளுக்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் தினம் தோறும் ஆய்வு செய்து வருகிறார். சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள ரோடு ஷோவுக்கான பாதைகள் உள்ளிட்டவற்றையும் காவல் ஆணையர் ஆய்வு செய்தார். அந்த வகையில் இன்றும் முதல்வரின் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு தனது காரில் சோழவரம் வழியாக சென்று கோண்டிருந்தார்.
அப்போது ஜி.என்.டி சாலையில் சென்பிலி சோழவரம் சந்திப்பில் வாகனங்கள் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தன. அந்த வகையில், ஆவடி காவல் ஆணையரின் வாகனமும் நின்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரியின் டயர் ஒன்று வெடித்து கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் அந்த சரக்கு வாகனம் ஆவடி மாநகர காவல் ஆணையரின் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காவல் ஆணையர் பயணித்த கார் நொறுங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காவல் ஆணையரின் பாதுகாவலர் மாரி செல்வம் என்பவர் கையில் காயம் அடைந்தார். அவரை மீட்ட போக்குவரத்து காவல்துறையினர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் சிக்கியதில் ஆவடி காவல் ஆணையரின் காரின் பக்கவாட்டு பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்தை அடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். சென்னை அருகே வாகன விபத்தில் காவல் உயர் அதிகாரியான ஆவடி காவல் ஆணையரின் கார் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications