ஆவடி கமிஷனரகத்தில் 18 இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம்.. கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவு
சென்னை: சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் 18 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
ஆவடி போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா வெளியிட்ட உத்தரவின் படி,பொன்னேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழன்பன் பொன்னேரி இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செங்குன்றம் சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் எண்ணூர் இன்ஸ்பெக்டராகவும், முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் புதூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், அம்பத்தூர் எஸ்டேட் இன்ஸ்பெக்டர் கோபிநாத் முத்தாபுதுப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

ஆவடி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டராகவும், எண்ணூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஆவடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராகவும், ஆவடி டேங்க் பேக்டரி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தனம்மாள் ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அகிலன்ராஜ் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
எஸ்.ஆர்.எம்.சி சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிரபு பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷினி ஆவடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், திருநின்றவூர் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அசோக்குமார் எஸ்.ஆர்.எம்.சி. இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
மவுலிவாக்கம் இன்ஸ்பெக்டர் சடையாண்டி அம்பத்தூர் ஸ்டேட் இன்ஸ்பெக்டராகவும், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரி ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டராகவும், ஆவடி மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக் கொரட்டூர் இன்ஸ்பெக்டராகவும், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் மணலி புதுநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications