‛‛ஆதரவு + எதிர்ப்பு’’.. பெரியாரின் வாசகத்தை ட்ரெண்ட் செய்த சென்னை மாநகர போலீஸ்! குவியும் கமெண்ட்
சென்னை: சென்னை மாநகர காவல்துறை சார்பில் ‛அவள்' திட்ட விழிப்புணர்வுக்காக பெரியார் போட்டோவுடன் அவரது வாசகங்கள் எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவிடப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த விமர்சனம் செய்வதால் விவாதம் கிளம்பி உள்ளது.
சென்னை மாநகர போலீஸ் சார்பில் சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை மாநகர போலீசார் பேஸ்புக், எக்ஸ், இன்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தனியாக கணக்கு தொடங்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் தான் இன்றைய தினம் ‛அவள்' திட்ட விழிப்புணர்வு பற்றி சென்னை மாநகர போலீஸின் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த பதிவு தான் தற்போது கவனம் பெற்று ஆதரவு + எதிர்ப்பை சம்பாதித்து வருகிறது.
அதாவது தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்களின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ‛அவள்' என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. மேலும் சிறப்புத் தபால் உறையினை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டார். ‛அவள்' என்ற திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது பெண்களுக்கான விழிப்புணர்வை வழங்குவது தான்.
அதாவது குற்ற சம்பவங்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்குவது, தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்துவதையும் இந்த திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் தான் ‛அவள்' திட்ட விழிப்புணர்வு தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் சார்பில் எக்ஸ் பக்கத்தில் விழிப்புணர்வு போஸ்ட்டுகள் பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்றைய தினம் சென்னை மாநகர போலீசின் எக்ஸ் பக்கத்தில் பெரியாரின் வாசகங்கள் பதிவிடப்பட்டுள்ளது. அதாவது பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் பெரியார் கூறிய கருத்துகள் பதிவாக இடப்பட்டன. அதன்படி ‛‛பெண்களிடம் கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் - பெரியார்'' என்ற வாசகம் பதிவிடப்பட்டுள்ளது.
பெண்களிடம் கரண்டியை பிடிங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் - பெரியார்#அவள் #காவல் #aval #avalbygcp #avalsafety #avalawareness #GCPAVAL pic.twitter.com/mL2ui8F9YW
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) February 13, 2024
அதேபோல், ‛‛ஒவ்வொரு பெண்ணும் தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத்தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். அப்படி கற்றிருந்தால் எந்த கணவனும் மனைவியை அடிமையாய் நடத்த துணியமாட்டான்'' என்ற வாசகம் பெரியாரின் போட்டோவோடு இமேஜாக பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவு என்பது தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒருதரப்பினர் இந்த பதிவை வரவேற்றுள்ள நிலையில் இன்னொரு தரப்பினர் வழக்கம்போல் பெரியாரை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இதனால் இந்த பதிவுக்கு கலவையான கமெண்ட்டுகள் குவிந்து விவாதமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications