லைம்லைட்டை அபகரித்த பாஜக.. சீனுக்கு உள்ளேயே வராத அதிமுக.. எடப்பாடிக்கு நேற்று என்ன நடந்தது?
சென்னை: கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான விவாதங்கள் நடந்து வந்த நிலையில் அதில் அதிமுக தலைவர்கள் யாரும் தலையிடவே இல்லை.
நேற்று ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு இடையே, கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.

தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்
அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.

முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜக vs திமுக: இது இணையத்தில் பாஜக vs திமுக என்ற மோதலை ஏற்படுத்தியது. நாம் தமிழர் கட்சி கூட இந்த விவகாரத்தில் கருத்து கூறி வந்தது. ஆனால் அதிமுக இதில் எந்த கருத்தும் சொல்லவில்லை. கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான விவாதங்கள் நடந்து வந்த நிலையில் அதில் அதிமுக தலைவர்கள் யாரும் தலையிடவே இல்லை.
பாஜக மொத்தமாக திமுகவிற்கு எதிரான லைம்லைட்டை எடுத்துக்கொண்டது. ஆனால் அதிமுக சீனுக்குள் உள்ளேயே வரவில்லை. எதிர்க்கட்சியாக இருந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி இதை பற்றி எதுவுமே பேசவே இல்லை.
ஜெயக்குமார் அறிக்கை; நேற்று அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்று பச்சோந்தியாக வண்ணம் மாறும் திமுக-விற்கு கடும் கண்டனம் என்று அறிக்கை வெளியிட்டார்.
திமுக இளைஞர் மாநாட்டை பற்றி விமர்சனம் செய்து, சேலம் திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஓரிரு குடும்பத்தைத் தவிர, திமுக-வின் மூத்த தலைவர்களின் குடும்பங்கள்கூட வரவில்லை என்பது கண்கூடு. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மகளிர் வந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன. ஏனெனில், சென்னை விருகம்பாக்கத்தில் மகளிர் அணி நடத்திய கூட்டத்தில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலருக்கு ஏற்பட்ட நிலை திமுக மகளிர் அணியினரின் மனக் கண்ணில் வந்ததோ ? என்னவோ ? தெரியவில்லை.

உலக முதலீட்டாளர் மாநாடு என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சியைப் போன்றே, 20.1.2024 அன்று மாலை திமுக-வின் மாநாட்டில் தொண்டர்களைக் கவர்ந்திழுக்க கவர்ச்சி நடனம் நடத்தியும், நிகழ்ச்சிக்குப் போதுமான அளவு கூட்டம் சேர்க்க முடியாமல் ஆளும் தரப்பு தடுமாறிப் போயுள்ளது.
ஆட்சி, அதிகாரம், பணபலம், அரசு இயந்திரம் அனைத்தையும் பயன்படுத்தி, கடந்த 32 மாதங்களில் கொள்ளை அடித்த பணத்தில் பல கோடிகளை அள்ளி வீசி ஒரு லட்சம் பேரைக்கூட திரட்ட முடியாத படுதோல்வி மாநாடாக சேலம் திமுக இளைஞர் அணி மாநில மாநாடு முடிந்திருக்கிறது, என்று கூறி உள்ளது.
கடந்த 2 நாட்களாக தமிழ்நாட்டில் ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான விவாதங்கள் நடந்து வந்த நிலையில், அது பற்றியே விவாதம் நடந்து வந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்கள் யாரும் இதில் தலையிடவே இல்லை என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications