ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாட்டம்... வீடுகள், கடைகளில் கோலாகலம்
சென்னை: தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சந்தைகளில் பூக்கள், பழங்கள், அவல்-பொரி, கடலை விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. வீடுகள், கடைகளை தூய்மைப்படுத்தி, மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்து, பூக்கள், பழங்கள் வைத்து, தாங்கள் செய்யும் தொழிலை தெய்வமாக பூஜித்தும், சரவஸ்வதியை பூஜித்தும் வழிபட்டு வருகிறார்கள்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பது நவராத்திரி விழாவின் அங்கம் ஆகும். இது புரட்டாசி மாதம் வளர்பிறை நவமியில் வரும். இந்த பண்டிககை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்றும், வடமாநிலங்களில் நாளையும் நவராத்திரி பண்டிகை மிகவும் உற்சமாக கொண்டாப்படுவது வழக்கம்.

இந்த நாளில் தங்களது தொழிலுக்குப் பயன்படும் கலப்பை, கருவிகள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள் போன்றவற்றை வைத்து இறைவழிபாடு செய்யப்படுகிறது. இதனை அஸ்திர பூஜை என்றும் அழைப்பார்கள். நாளை விஜயதசமி அன்று பள்ளிகளில் குழந்தைகளை முதல் முதலாக சேர்ப்பார்கள்.. இப்படி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை அன்று வழிபடுவதன் மூலம் தொழில் வளர்ச்சியும், கல்வியில் சிறந்த தேர்ச்சியும் பெறுவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
பொதுவாக நவராத்திரி விழாவை பொறுத்தவரை முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுவது வழக்கம். வீரம், செல்வம், ஞானம் இந்த மூன்றும் மனிதனுக்கு அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் நவராத்திரியின் முதல் 3 நாட்கள் வழிபாடு இருக்கிறது. இதில் நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. இதை நினைவுபடுத்தும் விதமாகவே சரஸ்வதி பூஜை அன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், வாழ்விற்கு ஆதாரமாக திகழும் பொருட்களை வைத்து கொண்டாடுகிறார்கள். நவராத்திரி விழாவின் நிறைவாக பத்தாவது நாளில் அம்பிகை மகிஷனை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
வீடு வாசல் நிலை, கதவுகள், ஜன்னல்கள் எல்லாவற்றையும் துடைத்து சுத்தம் செய்கிறார்கள். திருநீறில் பட்டை போட்டு சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கிறார்கள். பின்பு மாவிலை தோரணம் கட்டுகிறார்கள். பின்னர் பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து பூ வைத்து அலங்கரித்து, சரஸ்வதி தேவியை வழிபடுவதற்கு முன்பு வினை தீர்க்கும் விநாயகரை வழிபடுகிறார்கள்.பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து குங்குமத்தில் பொட்டு வைத்து, அருகம்புல் ஆகியவை வைத்து வழிபட்ட பின்பு பூஜையறையில் புத்தங்கள், பேனாக்கள் வைத்து சரஸ்வதி தேவியை வணங்குவார்கள்..
வணிக நிறுவனங்கள், கடைகளை பொறுத்தவரை தொழிலை வணங்க வேண்டிய தினம் தான் இன்று தான் என்பதால் கடைகளை சுத்தம் செய்து, கடைகளில் உள்ள பொருட்களை வைத்து சரஸ்வதியை வழிபடுவார்கள். இந்த பண்டிகையை முன்னிட்டு, சந்தைகளில் பூக்கள், பழங்கள், அவல்-பொரி, கடலை விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications