தீர்க்கதரிசி பாபா வாங்கா பெரிய குண்டை தூக்கி போட்டுட்டாங்களே? ஏஐ டூ ஏலியன்கள்.. 2026 கணிப்பு பாருங்க
சென்னை: பல்கேரியாவின் பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வாங்கா, 20ம் நூற்றாண்டில் பல உலக நிகழ்வுகளை முன்னரே கணித்தவர்... அவரது பல கணிப்புகள் நிரூபணமாகி உள்ளன.. அதனால் ஒவ்வொரு வருட முடிவிலும் பாபா வங்கா சொல்லும் கணிப்புகள் உலக மக்களின் கவனத்தை பெற்றுவிடும்.. அப்படித்தான் அவரது 2026-ம் ஆண்டுக்கான கணிப்புகள் மீண்டும் பேசப்படுகின்றன. அவைகள் பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
2026 புத்தாண்டு வரப்போகிறது.. இன்னும் 2 நாள்தான் உள்ளது.. உலகப் போர்கள், இயற்கை பேரழிவுகள் போன்ற அவரது கணிப்புகள் பல பலித்துள்ள நிலையில், வரப்போகும் ஆண்டு குறித்தும் பாபா வாங்கா கணிப்புகள் எழுதி வைத்துள்ளார்..

அந்த கணிப்புகள் கடந்த சில நாட்களாகவே இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. குறிப்பாக, 2026ல் மூன்றாம் உலகப் போர் குறித்து பாபா வாங்கா கணித்துள்ளார்..
உலகின் வல்லரசு நாடுகளுக்கிடையே நிலவும் அகந்தையும் அதிகாரப் போட்டியும், ஒரு பெரும் போராக வெடிக்கலாம், முக்கியமாக ரஷ்யா-அமெரிக்கா இடையேயான மோதல்கள், சீனா-தைவான் விவகாரம் போன்றவை இந்த உலக போருக்கு அடித்தளமாக அமையும் என்று கணித்துள்ளார்..
விண்வெளி ஏலியன்கள்
அதேபோல வரும் வருடம், அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அளவுக்கு இந்தப் போர் பயங்கரமாக இருக்கும் என்றும் ஏற்கனவே பாபா வாங்கா கணித்துள்ளார்.
அதேபோல 2026 நவம்பர் மாதத்தில் மனிதர்கள் விண்வெளி ஏலியன்களை நேரக்கு நேர் சந்திப்பார்கள்., பூமியின் வளிமண்டலத்தில் ஒரு பெரிய, மர்மமான விண்கலம் நுழையும். அது மனித வரலாற்றில் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் பாபா வாங்கா கணித்து கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, தங்கம் மற்றும் இதர மதிப்புமிக்க உலோகங்களின் விலையில் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி மாற்றம் வரும் என்றும் கணித்துள்ளார்.
AI முதல் சிறிய மின்னணு சாதனங்கள்
இந்நிலையில்தான், வரக்கூடிய 2026-ம் ஆண்டில் மனித குலம், ஸ்மார்ட்போன்கள், கணினி, சிறிய மின்னணு சாதனங்கள், மற்றும் ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை மிகவும் சார்ந்திருப்பார்கள் என்ற பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தங்களது அன்றாட வாழ்க்கையை எளிதாக்க சிறிய மின்னணு சாதனங்களை அதிகமாகச் சார்ந்திருப்பார்கள், அந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் போன்றவற்றை மாற்றக்கூடும்..
இந்த சாதனங்கள் மனிதர்களின் நடத்தை, உறவுகள், கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை பாதித்து, மன அழுத்தம், கவலை, தூக்கக்குறைவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுவார்கள்" என்றெல்லாம் கணித்துள்ளார் பாபா வாங்கா.
ஏஐ என்ற வார்த்தை?
ஆனால், பாபா வாங்கா தன்னுடைய கணிப்புகளில் ஏஐ என்று குறிப்பிடவில்லை. ஆனால் மனிதர்கள் அதிகமாக இயந்திரங்களை சார்ந்தவர்களாக மாறுவார்கள் என்று மட்டுமே கூறியிருப்பதாக ஒரு சாரார் கூறுகிறார்கள்..
மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை விஞ்சும் அளவுக்கு வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதாகவும், அது மனித வாழ்க்கையின் முக்கிய துறைகளில் கட்டுப்பாட்டைப் பெறக்கூடும் என்றும் என்றுதான் எச்சரித்துள்ளாரே தவிர, ஏஐ என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை என்கிறார்கள்.
ரோபோக்கள்
மொத்தத்தில் 2026-ம் ஆண்டில் மனிதர்கள் தொழில்நுட்பத்தை அதிகமாகப் பயன்படுத்தினாலும், அதை சரியாகவும் அளவோடு பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பம் நம்மை உதவியாக இருக்கலாமே தவிர, அதற்கு அடிமையாக மாறக் கூடாது. ரோபோக்கள், ஆட்டோமேஷன் வேலை மற்றும் வாழ்க்கையில் பல உதவிகளை செய்தாலும், கட்டுப்பாடு வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதுதான் பாபா வங்காவின் கணிப்புகளின் மூலம் தெரியவருகிறது..
மனிதர்கள் சிறிய தொழில்நுட்பங்களின் அடிமைகளாக மாறுவார்கள் என்ற பாபா வாங்காவின் இந்த கணிப்புகள்தான் மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications