வங்கிகள் லீவு.. இன்று முதல் 5 நாளைக்கு தமிழகத்தில் பேங்குகள் விடுமுறை.. ஆனாலும் இந்த ஆப்ஷன் இருக்கே
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. எனினும், மொபைல் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகிறார்கள்.. நாளை 14ம் தேதி போகி கொண்டாப்பட உள்ளது.. புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது..

பண்டிகைகள்: நாளை மறுநாள், பொங்கல் பண்டிகை அதாவது வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல், ஜனவரி 17ம் தேதி உழவர் திருநாள் ஆகிய பண்டிகைகள் கொண்டாப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அந்தவகையில், இந்த முறை 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது..
இதனால், பல்வேறு பெரிய நகரங்களில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். அந்தவகையில், இன்றிலிருந்து தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது...
5 நாட்கள் லீவு: ஜனவரி 13 ம் தேதி 2 ம் சனிக்கிழமை, ஜனவரி 14, பொதுவிடுமுறை, ஜனவரி 15, திங்கட்கிழமை பொங்கல், ஜனவரி 16 செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஆன்லைன், வாட்ஸ் அப் மற்றும் மொபல் வங்கி சேவை வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வங்கிகளுக்கு பல மாநிலங்களில் தொடர்ந்து 5 நாடவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், உங்களது பணத்தேவைகளை முறையாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வங்கிகள் லீவு: நம்முடைய இந்தியாவை பொறுத்தவரை, அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்தும் வருகிறது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் தொடக்கத்திலேயே அறிவித்து விடும். எனவே, பொதுமக்களும், தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். அந்தவகையில், இந்த ஜனவரி மாதத்துக்கான விடுமுறையையும் ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்திருந்தது.
ஜனவரி மாதத்தில் 16 மட்டும் நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2வது, 4வது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் போன்றவை அனைத்தும் இதில் அடங்கும்..
அறிவிப்புகள்: எனினும், இந்தியா முழுமைக்கும் இந்த விடுமுறைகள் பொருந்தாது என்றாலும், அந்தந்த மாநிலத்தை பொறுத்தே வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படும். அந்தவகையில், கீழ்க்கண்ட நாட்களில் தமிழகத்துக்கு வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நோட் பண்ணுங்க மக்களே:

ஜனவரி 13 - இரண்டாவது சனிக்கிழமை
ஜனவரி 14 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 15 - பொங்கல்
ஜனவரி 16 - திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 - உழவர் திருநாள்
ஜனவரி 21 - ஞாயிற்றுகிழமை
ஜனவரி 26 - குடியரசு தினம்
ஜனவரி 27 - 4வது சனிக்கிழமை
ஜனவரி 28 - ஞாயிற்றுகிழமை












Click it and Unblock the Notifications