65 ஆயிரம் கோடி அனாமத்தா பேங்கில் தூங்குது.. இனி ஈசியா எடுக்கலாம்! வாரிசுகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்கள் வாரிசுதாரராக 4 பேரை நியமிக்கலாம் என்ற புதிய விதி விரைவில் அமலாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வங்கி திருத்த சட்ட விதிகளின்படி நிதி அமைச்சகம் இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது.. இதன் மூலம், வங்கிகளில் நீண்ட நாட்களாக கேட்பாரின்றி இருக்கும் உரிமை கோரப்படாத பணம், நகை உள்ளிட்ட உடைமைகள் கணிசமாக குறையும் என நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறிகின்றன.

நிதி அமைச்சகம் வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்களின் உரிமை மற்றும் வாரிசு நியமன விதிகளில் புதிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் வங்கி கணக்கு, லாக்கர் போன்ற வசதிகளை பயன்படுத்துபவர்கள் தற்போது ஒரே வாரிசுதாரரை நியமிக்க முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது.

அடுத்த மாதம் நவம்பர் 1 முதல் புதிய விதிகள் முழுமையாக அமல் செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது," வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் அல்லது லாக்கர் வசதிகளை பயன்படுத்துபவர்கள் தங்கள் சொத்துகளுக்கான வாரிசுதாரராக 4 பேரை நியமித்து, அவர்களுக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கவேண்டிய தொகையை முன்கூட்டியே அறிவிக்கலாம்.

chennai Bank rbi

வங்கி வாரிசு விதி

இதன் நோக்கம், உரிமை கோரப்படாமல் வங்கி கணக்குகளில் முடங்கும் பணம் மற்றும் நகை போன்ற உடைமைகளை குறைப்பதாகும். ரிசர்வ் வங்கியின் கணக்குகளுக்குப் பின் வரும் நடவடிக்கைகள் குறித்து பார்த்தால், கடந்த ஜூன் மாத நிலவரப்படி பொதுத்துறை வங்கிகளில் ரூ.58,330 கோடி, தனியார் வங்கிகளில் ரூ.8,673 கோடி பணம் உரிமை கோரப்படாமல் முடங்கி நிற்கிறது. இதன் முக்கிய காரணமாக கணக்குதாரர் மரணமடைந்து, அவர் முன்மொழிந்த வாரிசுதாரர்கள் பணத்தை பெறாமல் இருப்பது தான் குறிப்பிடப்படுகிறது.

உரிமை கோராத பணம்

இதுவரை நடைபடுத்தப்பட்ட பழைய விதிகளின்படி, கணக்கு அல்லது லாக்கர் வசதி வைத்திருப்பவர்கள் ஒரே வாரிசுதாரரை மட்டுமே நியமிக்க முடிந்தது. ஆனால் இதனால் நகை, பணம் போன்ற சொத்துக்கள் வங்கிகளில் முடங்கி இருக்கும் அளவு அதிகரித்துள்ளது. இதனை தடுக்க புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வங்கிகளில் இந்த புதிய விதிகள் செயல்படுத்தப்படும் போது, கணக்கு மற்றும் லாக்கர் வாடிக்கையாளர்கள் நேர்மறையான முன்கூட்டிய அறிவிப்புடன் 4 பேரை வாரிசுதாரர்களாக நியமிக்க முடியும்.

புதிய விதிகள்

கணக்குதாரர் அல்லது லாக்கர் பயன்பாட்டாளர் மரணமடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கே அந்த பணம் அல்லது சொத்துக்கள் வழங்கப்படும். இதனால், உரிமை கோரப்படாமல் முடங்கும் தொகை குறைந்து, வங்கிகளில் பாதிக்கப்பட்டவர்களின் சொத்து பாதுகாப்பாக பகிரப்பட வாய்ப்பு அதிகரிக்கும். தற்போது அறிமுகமாகவுள்ள புதிய விதிகளின் படி வங்கிகளில் கணக்கு பராமரிப்பவர்கள் தங்களது சொத்துக்கள் பாதுகாப்பாக வாரிசுதாரர்களுக்கு பகிர்ந்தளிக்க முடியும்.

வாரிசு நியமனம்

இதேபோல் லாக்கர் வசதியிலும் நகை, பத்திரங்கள் போன்ற சொத்துக்கள் பாதிப்பு இல்லாமல் வாரிசுதாரர்களுக்கு செல்லும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வங்கிகள் இந்த புதிய விதியை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனும் தகவலை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், நீண்டகாலமாக வங்கிகளில் முடங்கி இருக்கும் பணம், நகை போன்ற சொத்துக்களை குறைக்கவும், வாரிசுதாரர்களுக்கு உரிமையை பாதுகாப்பாக வழங்கவும் அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது என்கின்றன நிதி அமைச்சக வட்டாரங்கள். எனவே வங்கியில், தங்கள் தந்தை உள்ளிட்டோர் ஏதாவது பணம் மற்றும் லக்கர்களில் நகைகள் உள்ளிட்டவற்றை வைத்திருந்தால் அவர்களது வாரிசு தாரர்கள் உரிமைகோரி அவற்றை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+