NDA கூட்டத்துக்கு இன்றைய தேதியை தேர்வு செய்தது ஏன்? இவ்வளவு விஷயம் இருக்கா! ஜோதிடர் உடைத்த உண்மை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். இந்நிலையில் தான் ஜனவரி 23ம் தேதி (இன்று) பாஜக சார்பில் இந்த கூட்டத்தை தொடங்கி இருப்பதன் பின்னணி பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. இந்த கூட்டணியில் அன்புமணி ராமதாஸின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உள்பட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இந்நிலையில் தான் சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி முதல் முறையாக இன்று தமிழகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்பட பிற கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
பொதுவாக தேர்தல் அறிவித்த பிறகு வார நாட்களிலும் பொதுக்கூட்டம் நடக்கும். அதற்கு முன்பாக என்றால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழகைளில் தான் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். குறிப்பாக சனிக்கிழமை மாலையில் தான் அதிகளவில் பொதுக்கூட்டம் நடத்தப்படும். ஆனால் பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாஜக சார்பில் இன்று ஜனவரி 23ம் தேதியை பொதுக்கூட்டத்துக்கு தேர்வு செய்ததன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்று வசந்த பஞ்சமி தினமாகும். இது வடஇந்தியாவில் மிகவும் முக்கிய நாளாகும். சரஸ்வதி தேவிக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் வடஇந்தியாவில் பெதுமக்கள் வீடுகளிலும், கோவில்களிலும் பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். மேற்கு வங்கத்தில் குழந்தைகளின் கல்வியை இந்த நாளில் தொடங்குவார்கள்.
மேலும் இந்த வசந்த பஞ்சமி தினத்தில் ஒரு காரியத்தை தொடங்கினால் வெற்றி கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது. அந்த வகையில் தான் பாஜக சார்பில் ஜனவரி 23ம் தேதியான இன்று மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி பிரபல ஜோதிடர் பிரதோஷ் என்பவரும் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛என்டிஏ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கான பரிகாரம் மற்றும் முகூர்த்த நேரத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும். ஜனவரி 23ம் தேதியான இன்று வசந்த பஞ்சமி. இந்த நாள் புதிய தொடக்கங்கள், ஞானம், தெய்வீக அருளை குறிக்கும்.
இது மங்களகரமான நாள். ஜோதிட ரீதியாக இது என்டிஏவிற்கு 100 சதவீதம் சாதகமான அதிர்ஷ்டத்தை தர வாய்ப்புள்ளது. இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பிரதமர் நரேந்திர மோடி இந்த நாளில் சென்னையில் பிரசாரம் செய்வது நேர்மறையான உத்வேகத்தை வலுவாக தூண்டி வெற்றி வாய்ப்புகளை அதிகப்படுத்தும்'' என்று கூறியுள்ளார். இதனால் தான் வசந்த பஞ்சமி தினத்தை குறிவைத்து பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தை தமிழகத்தில் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்?












Click it and Unblock the Notifications