கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்!
சென்னை: கொளத்தூர் சட்டசபை தொகுதி ஸ்டார் தொகுதியாக உள்ளது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அதிமுக சார்பில் ராயபுரம் மனோ வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன.
முதலமைச்சர் ஸ்டாலின், 2011, 2016, 2021 ஆகிய 3 தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற தொகுதி கொளத்தூர். ஸ்டாலின் சென்னையில் இருக்கும் போதெல்லாம் கொளத்தூர் தொகுதிக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். ஏராளமான திட்டங்களையும் தனது தொகுதியில் செயல்படுத்தி உள்ளார் ஸ்டாலின். வரும் சட்டசபை தேர்தலிலும் அவர் கொளத்தூர் தொகுதியிலேயே மீண்டும் களமிறங்க உள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக வேட்பாளர்
இந்நிலையில், அதிமுக சார்பில் இதுவரை 150 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதில், கொளத்தூர் தொகுதியும் ஒன்று. கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கப்போகும் வலுவான அதிமுக வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து ராயபுரம் மனோ அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. மு.க.ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயராக பணியாற்றிய காலத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகராட்சி கவுன்சிலராக இருந்தவர் ராயபுரம் மனோ. இந்நிலையில், முதல் முறையாக அவர் ஸ்டாலினை நேரடியாக எதிர்த்து நிற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ராயபுரம் மனோ?
ராயபுரம் மனோவின் இயற்பெயர் மனோகர். வட சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். பி.டெக் முடித்த மனோகர் எம்.டெக், எம்பிஏ படிப்பை நிறைவு செய்தார். அதன் பிறகு அரசியலில் நுழைந்த மனோகர், வட சென்னை மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்.
காங்கிரஸ் கட்சியில் சென்னை மாவட்டத்தில் முக்கியத் தலைவராக மாநில அளவில் அறியப்பட்டவர்களில் ராயபுரம் மனோ முக்கியமானவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த ராயபுரம் மனோ, மூப்பனாரின் தீவர ஆதரவாளராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து மூப்பனார் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது ராயபுரம் மனோவும் தமாகாவில் இணைந்தார்.
ஜிகே வாசன் ஆதரவாளர்
மூப்பனார் மறைவுக்குப் பின்னரும் தொடர்ந்து தமாகாவிலேயே இருந்த அவர் பின்னர் ஜி.கே.வாசன் காங்கிரஸுக்கு திரும்பியபோது தானும் காங்கிரஸுக்குத் திரும்பினார். காங்கிரஸில் ஜிகே வாசனின் முக்கிய ஆதரவாளராக விளங்கிய அவர் வாசன் கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
பின்னர் ஜிகே வாசன் மீண்டும் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது மனோ காங்கிரஸிலேயே இருந்தார். சில காலம் திருநாவுக்கரசர் ஆதரவாளராக இருந்தார். சென்னையில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவது, கூட்டங்கள் நடத்துவது என காங்கிரஸ் கட்சியில் பரபரப்பாக இயங்கியவர் மனோ.
அதிமுகவில் இணைந்தார்
சத்தியமூர்த்தி பவனில் ரூ.20 லட்சம் செலவில் 150 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தை அமைத்தவர் ராயபுரம் மனோ தான். காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகள் அவருக்கு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்த அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து அதிமுகவில் இணைந்தார் ராயபுரம் மனோ. அதிமுகவில் எம்.ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பை அளித்தார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் வடசென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியிடம் தோல்வி அடைந்தார் ராயபுரம் மனோ. அங்கு 3 ஆம் இடம் பிடித்த பாஜகவின் பால் கனகராஜ் 1.13 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து
இந்நிலையில், முதல்வர் வேட்பாளரான ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் கொளத்தூரில் களமிறங்க இருக்கிறார் ராயபுரம் மனோ. வடசென்னை ஏரியாவில் நன்கு பரிச்சயமான முகம் என்பதால், ஸ்டாலினை எதிர்த்து நிற்க சரியான ஆள் ராயபுரம் மனோ தான் என எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த தொகுதி வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.
-
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம்












Click it and Unblock the Notifications