பவாரியா கேங்கை சேர்ந்த ஜெயில்தார் சிங்கை இன்று குற்றவாளி என அறிவிக்காத நீதிமன்றம்.. யார் இவர்?
சென்னை: முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. பவாரியா கும்பலைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. யார் இந்த ஜெயில்தார் சிங்?
தமிழகத்தில், 1995 முதல் 2005 ஆம் ஆண்டு வரை, பவாரியா கொள்ளை கும்பல் அட்டூழியம் செய்து வந்தது. பல இடங்களில் பல நாட்களாக நோட்டமிட்டு நேரம் பார்த்து நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பதோடு, கொடூரமாக கொலையும் செய்வது பவாரியா கும்பலின் பாணி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்த சுதர்சனம் உட்பட 13 பேரை கொலை செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பவாரியா கும்பல்.

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டு, ஐ.ஜியாக இருந்த ஜாங்கிட் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைத்தார். தனிப்படை போலீசார், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் முகாமிட்டு, பவாரியா கொள்ளையர்கள் 13 பேரை கைது செய்தனர். உ.பியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பவாரியா கொள்ளையர்கள் 13 பேரில், 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. பின், சென்னை உயர் நீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. அந்த நால்வரில் பவாரியா கொள்ளை கும்பல் தலைவனான ஓம் பிரகாஷ், வேலுார் சிறையில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். மற்ற மூவர், தண்டனை அனுபவித்து வருகின்றனர். 9 பேர் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
பவாரியா கொள்ளை கொல்லை வழக்கில், ஜெயில்தார் சிங் கடந்த 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக தேடப்பட்டுவந்த ஜெயில்தார் சிங்கை கைது செய்தனர் தனிப்படை போலீசார். சேலம் காங்கிரஸ் பிரமுகர் தாளமுத்து நடராஜன் வீட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கில் ஜெயில் தார்சிங் கைது செய்யப்பட்டிருந்தார். சுதர்சனம் கொலை வழக்கிலும் ஜெயில்தார் சிங் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சுதர்சனம் கொலை வழக்கில் கைதான ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. மற்றொரு குற்றவாளியான ஜெயில்தார் சிங் குறித்து வரும் 24 ஆம் தேதி உத்தரவிடப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆசிரியரான ஜெயில்தார் சிங், பவாரியா கும்பல் தலைவரான ஓம் பிரகாஷின் மருமகன். தமிழ்நாட்டில் கொள்ளையடித்துக் கொண்டு சென்று கொடுக்கும் நகைகளை விற்பனை செய்து, அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கும் வேலையை இவர்தான் செய்து வந்தார் என காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications