Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனு கொடுத்த பெண்ணை தாக்குவதுதான் திராவிட மாடலா? திமுக அமைச்சர் செயலால் கடுகடுத்த டிடிவி தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் அமைச்சர்கள் அதிகாரிகளை சாதிப்பெயர் சொல்லி திட்டுவதும், மனு கொடுத்த வந்தவர்களை தலையில் அடித்து விரட்டுவது தான் மேடைக்கு மேடை முதல்வர் முழங்கி வரும் திராவிட மாடல் போலும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்தார்.

Recommended Video

    மனு கொடுக்க வந்த பெண்ணை தலையில் தாக்கிய KKSSR Ramachandran | Virudhunagar | *Politics

    தமிழக முதல்வர் ஸ்டாலினின் அமைச்சரவையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதி எம்எல்ஏ கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் அமைச்சராக உள்ளார்.

    மூத்த அமைச்சர்களில் ஒருவரான இவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையை நிர்வகித்து வருகிறார்.

     பெண்ணை அடித்த திமுக அமைச்சர்

    பெண்ணை அடித்த திமுக அமைச்சர்

    இந்நிலையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். விருதுநகர் பாலவனத்தம் கிராமத்தில் அவரிடம் பொதுமக்கள் புகார் மனுக்களை வழங்கினர். அப்போது பெண் ஒருவர் தனது குறைகளை மனுவாக எழுதி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் வழங்கினார். அப்போது அமைச்சர் தனது கையில் வைத்திருந்த அழைப்பிதழ்களை கொண்டு அந்த பெண்ணின் தலையில் அடித்தார்.

    டிடிவி தினகரன் கண்டனம்

    டிடிவி தினகரன் கண்டனம்

    இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது. அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் செயலுக்கு கடும் கண்டனங்கள் பதிவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக்கத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி டிடிவி தினகரன் கூறியுள்ளதாவது:

    இதுதான் திராவிட மாடலா?

    இதுதான் திராவிட மாடலா?

    திமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப்பெயர் சொல்லி திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்து விரட்டுவது தான் மேடைக்கு மேடை முதல்வர் ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்?. அந்த காணொளியை பார்த்தப்போது, ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளை தெரிவிப்பார்கள்?. கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது'' என கூறியுள்ளார். மேலும் இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் அலுவலக டுவிட்டர் கணக்கை டிடிவி தினகரன் டேக் செய்துள்ளார்.

     பதவி விலக வேண்டும்

    பதவி விலக வேண்டும்

    முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி இருந்தார். இதுபற்றி அண்ணாமலை,‛‛மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர் பாலவனத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அடுத்த 48 மணிநேரத்துக்குள் அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுயைிடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+