பிஜேபி தந்த "மிட்டாய்" பரிசுகள்.. 5 மாநில தேர்தல் பட்ஜெட்டில் ஒளிந்துள்ள பவர்ஃபுல் "அல்வா" அரசியல்
சென்னை: இந்தியாவில் தேர்தல் வரப்போகிறது என்றால், மத்திய அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் அந்த மாநிலங்களுக்கு அதீத எதிர்பார்ப்புகள் கிளம்பிவிடும்.. தங்களுடைய மாநிலத்துக்கு "ஸ்பெஷல்' கவனிப்புகள்" இருக்குமோ? என்ற ஆர்வம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும்.. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இப்படியான எதிர்பார்ப்புகள்தான் கடந்த சில தினங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.. அந்த எதிர்பார்ப்பு இன்றைய பட்ஜெட்டில் பூர்த்தியாகி உள்ளதா? சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!
சட்டமன்றத் தேர்தல் மொத்தம் 5 மாநிலங்களில் விரைவில் வரப்போகிறது.. எனவேதான், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் வெறும் வளர்ச்சியாக மட்டுமல்லாமல், அரசியல் கணக்குகளாகவும் பார்க்கப்படுகின்றன.

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்
அதுமட்டுமல்ல, கடந்த 2024 ஜூலை, 2025 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.. வேலைவாய்ப்பின்மையை சமாளிக்க தனியார் துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதனால் இந்த முறை எப்படியும் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகும் என்ற நம்பிக்கை 5 மாநிலங்களிலும் வலுத்து காணப்பட்டது.
நம்முடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் காலையிலேயே ஒரு ட்வீட்டை போட்டுவிட்டார்.. தேர்தலை மனதில் வைத்தாவது தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவிட்டார்.. அதற்கேற்றவாறு தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களை மனதில் வைத்தே நிதியமைச்சர் சில அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்..
தமிழகத்துக்கு குட்நியூஸ்
தமிழ்நாட்டை எடுத்து கொண்டால், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இது நகர மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும்..
அதேபோல், சென்னை - பெங்களூரு விரைவுச் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம் போன்ற பெரிய சாலைத் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக, தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோ ஏவுதள பணிகளை வேகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தென் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அதிகமாக நமக்கு தந்துள்ளது..
மேலும், அரிய வகை கனிமங்களை எடுக்கத் தமிழகத்தைத் தேர்வு செய்திருப்பது ஒரு முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது..
கேரள பாலிட்டிக்ஸ்
கேரளா மாநிலத்தை பொறுத்தவரை, மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் மத்திய அரசு தன்னுடைய பங்கிற்கு விழிஞ்ஞம் துறைமுக இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது... கேரளாவில் புதிய மருத்துவ இடங்களை உருவாக்குவதன் மூலம், அந்த மாநில இளைஞர்களின் கல்வித் தேவையை மத்திய அரசு குறிவைக்கிறது.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்கள்
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஒரு பெரிய ஓட்டு வங்கியாகவே விளங்கி கொண்டிருக்கிறார்கள்.. அவர்களின் நலனுக்காக சிறப்பு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக அசாமில் ஒவ்வொரு வருடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளத்தை தடுக்க சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அந்த மாநில மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக,
தேர்தலை மையப்படுத்தியே இன்றைய பட்ஜெட் அறிவிப்புகள் இருப்பது கவனிக்கத்தக்கவையாகவே உள்ளன.. தேர்தல் நேரத்தில் சென்னை, பெங்களூரு மற்றும் சிலிகுரி போன்ற நகரங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை அறிவிப்பதன் மூலம், வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பாஜக அரசு முயல்வதும் அப்பட்டமாகவே தெரிகிறது..
சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களை அதிவேக ரயிலால் இணைப்போம் என்று சொல்வதும், நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது..
இந்த ரயில் திட்டத்தை அறிவிப்பது எளிது, ஆனால் அதை செயல்படுத்த பல வருஷம் ஆகும்... நிலத்தை கையகப்படுத்துவது, தண்டவாளம் அமைப்பது இப்படி ஏகப்பட்ட
வேலைகள் உள்ளன.. அதை எப்படி பாஜக செயல்படுத்த போகிறது என தெரியவில்லை..
கணக்கு போடும் பாஜக
பொதுவாக, தேர்தல் வரும்போது புதிய சாலைகள், பாலங்கள், அல்லது இப்படியான பெரிய ரயில் திட்டங்களை அறிவிப்பது வழக்கமான உத்திதான் என்றாலும், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் ஊரை சிங்கப்பூராக மாற்றுவோம்" என்றெல்லாம் சொல்வதற்கு பதில், "இதோ இப்பவே, இந்த பட்ஜெட்டிலேயே இதற்கான நிதியை ஒதுக்கிவிட்டோம்" என்று சொல்வது, அந்தந்த மாநில மக்களிடம் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று பாஜக கணக்கு போடுவதாக தெரிகிறது..
சுருக்கமாகச் சொன்னால், "நாங்கள் உங்கள் மாநிலத்தின் மீது அக்கறை கொண்டுள்ளோம்" என்று காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக மத்திய அரசு இந்த பட்ஜெட்டைப் பயன்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புகள் தேர்தலின் போது வாக்குகளாக மாறுமா அல்லது வெறும் அறிவிப்புகளாகவே நின்றுவிடுமா என்பதை 5 மாநில மக்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
டாஸ்மாக்கில் மதுபான விற்பனைக்கு கட்டுப்பாடு.. குடிமகன்களுக்கு ஷாக்.. தேர்தலையொட்டி அதிரடி -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications