ரூ.14 லட்சம் ரிட்டர்ன்.. 95 ரூபாய் முதலீட்டில் அசத்தல் பலன்கள்.. கிராம் சுமங்கல் யோஜனா திட்டம் பயன்
சென்னை: தபால் அலுவலக திட்டங்கள் மிகவும் பாதுகாப்பானவை.. நம்பகத்தன்மை மிக்கவை.. சிறந்த வருவாயை வழங்கக்கூடியவை.. அந்தவகையில், மிக முக்கியமான தபால் அலுவலக திட்டம் தான் தபால் அலுவலக கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டம். இந்த திட்டத்தின் பலன்கள் என்னென்ன? இத்திட்டத்தில் இணைய தகுதிகள் என்னென்ன? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு பணத்தை திரும்ப பெறுவதோடு காப்பீட்டுத் தொகையையும் வழங்கக்கூடிய திட்டம்தான், தபால் அலுவலக கிராம் சுமங்கல் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும்.

நம்பகத்தன்மை
இது ஒரு எண்டோவ்மென்ட் திட்டமாகும். சிறந்த திட்டம் என்பதுடன், நம்பகத்தன்மையான தபால் திட்டம் இதுவாகும். கிராமப்புற மக்களுக்கு காப்பீட்டு தொகையை வழங்கும் இந்த திட்டம், கடந்த 1995-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புறங்களை சேர்ந்த பலவீனமான பிரிவினருக்கும், பெண் தொழிலாளர்களுக்கும் பயனளிப்பதும், கிராமப்புற மக்களிடையே காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதில், போஸ்டல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராம தபால் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ) என்ற 2 வகையான திட்டங்கள் உள்ளன.. முதலாவது திட்டத்தில் 15 வருட பாலிசி உள்ளது.. இந்த உத்தரவாத தொகையில் 20 சதவீதம் 6, 9, 12 வருடங்களுக்கு பிறகு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.. இந்த 15 வருட கால பாலிசி எடுப்பதற்கான அதிகபட்ச வயது 45 வருடமாகும்.. மேற்கண்ட ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தலா 20 சதவீதம் மற்றும் முதிர்ச்சியடைந்த போனஸுடன் 40 சதவீதம் கிடைக்கும்.
போனஸ் + வயது நிர்ணயம்
2வது திட்டத்தில், 20 வருட பாலிசி உள்ளது.. இதில், 8, 12, 16 வருடங்களுக்கு பிறகு பணம் திரும்ப பெறலாம். மேற்கண்ட வருடங்கள் முடிந்ததும் தலா 20 சதவீதம் மற்றும் முதிர்ச்சியின்போது திரட்டப்பட்ட போனஸுடன் 40 சதவீதம் கிடைக்கும். இதில், முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 19. அதிகபட்சமாக 20 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 15 வருட பாலிசிக்கு 45 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம்.
சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படுகிறது. முதலீட்டாளர் இறந்துவிட்டால் காப்பீட்டு தொகை, அவரது குடும்ப உறுப்பினர், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும்.
கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா
கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் பாலிசிக்கான காலம் 40 ஆகும்.. இத்திட்டத்தில் இணைய குறைந்தபட்ச வயது வரம்பு 19 மற்றும் அதிகபட்ச வயது 20 வருடங்கள் ஆகும்... காப்பீட்டுதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அனைத்து உத்தரவாத தொகையும் போனஸுடன் சேர்த்து அவரது வாரிசு அல்லது நாமினிக்கு வழங்கப்படும். அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனாவில் முதலீட்டாளர் பணத்தை திரும்ப பெறலாம்.
கிராம் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் தினமும் ரூ.95 வீதம் மாத தவணையாக ரூ.2853 செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு முதலீட்டாளர் தன்னுடைய 25 வயதில் முதலீடு செய்வதாக இருந்தால், அவரது பாலிசி காலம் 20 வருடங்களாக இருக்கும். ரூ.7 லட்சம் உத்தரவாத தொகையாகும்.. இதில் வருடத்துக்கு ரூ. 32,735 செலுத்தினால் முதிர்ச்சியின்போது சுமார் ரூ.14 லட்சத்தை முதலீட்டாளர் பெறலாம்.
இந்த திட்டத்தில், 3 மாத அடிப்படையில் ரூ.8,850 முதலீடு செய்ய வேண்டும்.. 6 மாதம் என்றால் ரூ. 17,100 முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலமாக ரூ.14 லட்சம் முதிர்வுத் தொகையாக பெறலாம்.












Click it and Unblock the Notifications