செல்வமகள் சேமிப்பு திட்டம் முகாம்.. இதோ அஞ்சல் துறை சர்ப்ரைஸ்.. 30ம் தேதி ஆவணங்களுடன் ரெடியா இருங்க
சென்னை: சேமிப்பு திட்டங்கள் என்பது ஒருவரது நிதியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கும், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பதற்கும் உள்ள திட்டங்களாகும். இவை வங்கிகள், அஞ்சலகங்கள், மற்றும் பிற நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகின்றன.. இதில், அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்தவகையில், சென்னையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. அது என்ன?
இந்திய அஞ்சல் துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்கள் பெரும்பாலும் பாதுகாப்பானவையாகும்.. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் வழங்குகின்றன.

பலன்கள் ஏராளம்
இதில், பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (NSC), அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS), கிசான் விகாஸ் பத்ரா (KVP), சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்கள் அடங்கும்.
உதாரணத்துக்கு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமான, செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்து வருகிறது...
செல்வமகள் சேமிப்பு
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு 2015-ம் ஆண்டு செல்வமகள் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. உங்கள் மகளுக்கு 21 வயதில் 50 லட்சம் கிடைக்கக்கூடிய அருமையான திட்டமாகும். எனவேதான், இந்த திட்டம் குறித்த முகாம்கள் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன..
சமீபத்தில்கூட, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தபால் துறையின் சார்பில் மாவட்டந்தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்புத்திட்ட கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.. மேலும், இந்த திட்டத்தின் பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சார்பில் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன..
அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம்
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல தபால்துறையில் மட்டும் கடந்த ஜனவரி மாதம் வரை 7 லட்சத்து 86 ஆயிரம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டு, இதன் மூலம் ரூ.5,219 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தன.
அதுபோலவே, கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னையில் நடைபெறுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.. அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இம்முகாம் நடைபெற உள்ளது.. இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில் உள்ளதாவது:
சென்னை அண்ணாசாலை
"கோட்ட அளவிலான அஞ்சல் சேவை குறைதீர்க்கும் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் 30.06.2025 அன்று நடைபெற உள்ளது. குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். .
குறைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 26.06.2025 ஆகும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில், தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை (மணியார்டர்), விரைவு தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும். .
அஞ்சல் துறை கடிதங்கள் - புகார்
புகார் சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்மந்தமாக இருப்பின், கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடிதத் தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
குறைகளை அனுப்புவதற்கான முகவரி: முதன்மை அஞ்சல் அதிகாரி, அண்ணா சாலை தலைமை தபால் நிலையம், சென்னை 600 002. தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "அஞ்சல் சேவை குறை தீர்க்கும் முகாம்" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications