நம்பர் 1 முதலமைச்சர் யார்? இந்தியா டுடே சர்வேயில் ஸ்டாலினுக்கு மூன்றாமிடம்.. முந்திய பாஜக முதல்வர்!
சென்னை : இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர் யார் என்பது பற்றி இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 61 சதவீத மக்கள் ஆதரவுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.
Recommended Video
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78% மக்கள் ஆதரவுடன் முதலிடத்தையும், அசாம் முதல்வர் ஹிமாத் பிஸ்வாஸ் ஷர்மா 62% மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெளியிடப்பட்ட இந்தியா டுடே சர்வே முடிவுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்திருந்தார். அதன்பிறகு வெளியான சர்வே முடிவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முதலிடத்தைப் பிடித்தார். தற்போதும் அவரே அந்த இடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்தியா டுடே சர்வே
பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே 'மூட் ஆப் தி நேஷன்' என்ற பெயரில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள் மத்தியில் கருத்துக்கணிப்புகளை நடத்துவது வழக்கம். பல்வேறு விதமான கேள்விகளை பொதுமக்களிடம் கேட்டு கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே வெளியிடும். அந்தவகையில், இந்த முறை இந்தியா டுடே நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன

ஸ்டாலின் மூன்றாவது இடம்
இந்தியா டுடே நடத்திய 'செல்வாக்கு பெற்ற முதலமைச்சர்' தொடர்பான கருத்துக்கணிப்பில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத மக்கள் ஆதரவுடன் நம்பர் 1 முதல்வராக விளங்குகிறார். பாஜகவை சார்ந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 63% மக்கள் ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதைத் தொடர்ந்து 61 சதவீத மக்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா டுடேவால் வெளியிடப்பட்ட சர்வே முடிவுகளின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 42% சதவிகித மக்கள் ஆதரவுடன் முதலிடத்தில் இருந்தார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38% சதவிகித மக்கள் ஆதரவுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். கேரளா முதல்வர் பினராயி விஜயன் 35% சதவிகித மக்கள் ஆதரவுடன் மூன்றாம் இடத்தில் இருந்தார். அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா 29% சதவிகித மக்கள் ஆதரவுடன் ஆறாம் இடத்தில் இருந்தார்.

மோடிக்கு ஆதரவு அதிகம்
இப்போது இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு 53 சதவீதம் பேர் நரேந்திர மோடிக்கும் ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே ராகுல் காந்திக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 7 சதவீதம் பேர் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இப்போது தேர்தல் நடந்தால்
அதேபோல, லோக்சபா தேர்தல் இப்போது நடத்தப்பட்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 146 இடங்களிலும், மற்றவர்கள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பீகார் அரசியல் மாற்றங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 1 வரையிலான களநிலவரப்படி இந்தியா டுடே- சி வோட்டர் மேற்கொண்ட கருத்து கணிப்பின்படி, பாஜக கூட்டணி 307, காங். கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. பீகார் அரசியல் மாற்றத்தால் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த சர்வே எடுத்துக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications