குழந்தையை முதலையிடம் கொடுத்துவிட்டு நகைகளை பத்திரப்படுத்திய தாய்.. பாக்யராஜ் வெளியிட்ட அடுத்த வீடியோ
சென்னை: பெற்ற தாயே குழந்தையை முதலையிடம் கொடுத்துவிட்டு நகைகளை பத்திரப்படுத்திய சம்பவம் மனதை வேதனையில் ஆழ்த்துவதாக இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று முதல் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தலைப்பில் தன்னை வேதனையில் ஆழ்த்திய சம்பவங்களை கதை போல கூறி வருகிறார் பாக்யராஜ். அந்த வகையில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

உண்மைச் சம்பவம் என பகிர்ந்த பாக்யராஜ்: அதில் பேசும் பாக்யராஜ், "வடநாட்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் இது. அங்கு, ஆற்றில், ஒரு கரையில் இருந்து அடுத்த கரையில் உள்ள ஊருக்கு செல்வதற்கு படகுகளை பயன்படுத்துவார்கள். ஒரே நேரத்தில் படகின் அளவுக்கு தகுந்தது போல 20 பேர் வரை செல்வார்கள். சில நேரங்களில் படகோட்டிகள், காசுக்கு ஆசைப்பட்டு அதிகமானோரை படகில் ஏற்றிச் சென்று விபத்தில் சிக்குவது உண்டு.
அதைவிட கொடுமையான சமாச்சாரம் நடந்துள்ளது. ஒரு படகோட்டி சுமார் 20 பேரை ஏற்றிக்கொண்டு ஆற்றில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது குழந்தை ஒன்று படகின் ஓரமாக அமர்ந்து, ஆற்றுத் தண்ணீரில் கையை விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒரு முதலை வந்து, குழந்தையின் கையை கவ்விப் பிடித்துள்ளது. முதலை இழுக்க, குழந்தையின் அம்மாவும் குழந்தையை விடாமல் பிடித்து இழுத்துள்ளார்.
ஒருபக்கம் முதலை குழந்தையை கவ்வி இழுக்க, இன்னொரு பக்கம் குழந்தையின் தாய் விடாமல் இழுக்க, படகு கவிழும் நிலையில் வேகமாக ஆடத் தொடங்கியுள்ளது. உடனே படகுக்காரன், முதலையை குழந்தை விடாது, குழந்தையை விட்டு விடுங்கள், இல்லையென்றால் படகு கவிழ்ந்து எல்லோரும் போய்விடுவோம் எனக் கத்தியுள்ளான். ஆனால், பெற்ற தாய் தந்தையால் எப்படி கண் முன்னே குழந்தையை முதலைக்கு கொடுக்க முடியும்?
நெஞ்சு பொறுக்குதில்லையே! - 2 #tamil #shortstories #kbr #bhagyaraj pic.twitter.com/M593lbpsCP
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) February 13, 2024
நகையை கழற்றிக்கொண்டு: படகில் இருந்த மற்றவர்களும் குழந்தையை விடச் சொல்லி கத்துகிறார்கள். விட்டால் அவர்களே குழந்தை இழுத்து முதலையிடம் விட்டு விடுவார்கள் என்ற நிலை. படகு வேகமாக ஆடி கவிழும் நிலை வந்ததும், வேறு வழியின்றி குழந்தையை விட தீர்மானித்துள்ளார் அவரது தாய். அப்போது, குழந்தையின் கழுத்தில், காதில் இருந்து நகைகளை எல்லாம் அவசர அவசரமாக கழற்றிவிட்டு, அப்புறம் அந்த குழந்தையை ஆற்றில் விட்டுள்ளார்.
கண்முன்னே குழந்தையை முதலையிடம் விடுவதே ஜீரணிக்க முடியாத விஷயம். அதைவிட கஷ்டமாக இருந்தது, அந்த நேரத்திலும் முடிந்தவரை நகைகளை காப்பாற்ற முயன்றது, மனதுக்கு அவ்வளவு நெருடலாக இருக்கிறது" என கலங்கியபடி பேசியுள்ளார் பாக்யராஜ்.
மேட்டுப்பாளையம் சம்பவம் - பாக்யராஜ் வீடியோ: முன்னதாக, இதே போன்று பேசி, 'நெஞ்சு பொறுக்குதில்லையே - 1' வீடியோவை வெளியிட்டிருந்தார் பாக்யராஜ். அதில், "மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களில் நாங்கள் படப்பிடிப்பிற்காகச் சென்ற போது அம்பரபாளையம் ஆற்றில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வார்கள்.
அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி இறந்து போய்விடுவார்கள. இப்படி இறந்து போகும் நபர்களின் உடல்களை மீட்க அங்குத் தண்ணீருக்குள் தம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் இழுத்துச் சென்று பாறைக்குள் சிக்க வைத்து விடுவார்கள். பின்னர் உடலை மீட்டுக் கொடுக்க வசதிக்கேற்ப பணம் வாங்கிக் கொள்வார்கள். இந்த விஷயம் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது" எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொய்யான தகவல்: இந்நிலையில் பாக்யராஜின் இந்தக் குற்றச்சாட்டுக்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தார். அதில், "பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. அதுபோன்ற குற்றச் சம்பவம் ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை. வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்" எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக்யராஜ் தனது வீடியோவில், மேட்டுப்பாளையம் பகுதியில் ஆற்றில் நடந்ததாக கூறியது போன்ற சம்பவம் நடக்கவே இல்லை என காவல்துறை எஸ்.பியே விளக்கம் அளித்துள்ள நிலையில், ஊர் பெயரை குறிப்பிடாமல், பொதுவாக வடநாட்டில் எனக் கூறி, முதலையிடம் குழந்தையை விடும்போது நகையைக் கழற்றிக் கொண்டதாக மற்றொரு கதையைக் கூறியுள்ளார் பாக்யராஜ். இதன் உண்மைத்தன்மை பற்றி அறிய முடியவில்லை.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications