மத்திய அரசின் பாரத் பிராண்ட் அரிசி, கோதுமை வராதா? தமிழ்நாட்டுக்கு சூப்பர் திட்டம் ஆச்சே? என்ன காரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக, மத்திய அரசால் தொடங்கப்பட்டதுதான் "பாரத் பிராண்ட்".. இந்த சில்லறை விற்பனையால் பொதுமக்களின் உணவுத்தேவைக்கான எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும், விவசாய பொருட்களின் விநியோகம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், பாரத் பிராண்ட் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. என்ன நடந்தது?
நாட்டிலுள்ள விவசாயிகளின் விளைபொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்து, அவைகளை நுகர்வோருக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இந்த அடிப்படையில்தான், "பாரத்' பிராண்ட் ஆட்டாவின் சில்லறை விற்பனையையும் கடந்த 2023ம் ஆண்டு துவக்கியிருந்தது.
'பாரத்' பிராண்டின் கீழ் கோதுமை மாவு (ஆட்டா) விற்பனை செய்வதற்கான 100 நடமாடும் வேன் வாகனங்கள் டெல்லியில் துவக்கப்பட்டன.. இதில் கோதுமை மாவு ஒரு கிலோவுக்கு ரூ. 27.50-க்கு மிகாமல் சில்லறை விலையில் கிடைக்கும். இதனால், சந்தையில் மலிவு விலையில் விநியோகம் அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

மலிவு விலை அரிசி
அதேபோல, அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காகவும், மலிவு விலையில் அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து, 'பாரத் அரிசி' என்றும் பெயரிட்டது.. பாரத் கோதுமையை போலவே, பாரத் அரிசியும் மக்களின் கவனத்தை பெற்றிருந்தது.. 5 கிலோ, 10 கிலோ பாக்கெட்டுகளில், கிலோ ரூ.29 என்று பாரத் அரிசி விலை நிர்ணயிக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் பியூஷ் கோயல் அப்போது சொல்லும்போது, "மொத்த விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பெரும்பாலான மக்களுக்கு பலன் அளிக்கவில்லை என்பதால், சில்லறை சந்தையில் தலையிட்டிருக்கிறோம்.. இந்த அரிசி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நிச்சயம் பலனை தரும்..
பாரத் ஆட்டா ருசியாக இருக்கிறது
ஏற்கனவே 'பாரத் ஆட்டா' என்ற பெயரில் கோதுமை விற்பனையை தொடங்கிய பிறகு கோதுமை விலை குறைந்து விட்டது. அதுமாதிரி, பாரத் அரிசியும் அரிசி விலை குறைவுக்கு வழி வகுக்கும். நான் ஏற்கனவே 'பாரத் ஆட்டா', 'பாரத் பருப்பு' இதெல்லாம் பயன்படுத்தி இருக்கிறேன். நல்ல ருசியாக இருந்தது. இனிமேல், பாரத் அரிசியையும் கண்டிப்பாக வீட்டில் பயன்படுத்துவேன்" என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு, பொதுமக்களுக்கு மகிழ்ச்சி, நம்பிக்கையை தந்தது.. முறையற்ற பருவமழை, குறைவான விளைச்சல் உள்ளிட்ட காரணங்களினால், அரிசி விலை தாறுமாறாக உயர்ந்துவந்த சூழலில், மத்திய அரசின் பாரத் அரிசி, தமிழக மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றே கருதப்பட்டது.
அரிசி, பருப்பு, கோதுமை
ஆனால், சந்தையில் அரிசி, பருப்பு, கோதுமை ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, "பாரத் பிராண்டு" திட்டம் கைவிடப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.. அதாவது ஏப்ரல் மாதத்தில் உணவு பணவீக்கம் 1.78 சதவீதமாக குறைந்துள்ளதால், பாரத் பிராண்ட் தயாரிப்புகளை நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
உற்பத்தி அதிகரித்தாலும், முக்கிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாலும், பாரத் பிராண்ட் தயாரிப்புகள் நிறுத்தப்படுகின்றன.
மீண்டும் எப்போது துவங்கப்படும்
முக்கிய பருப்பு வகைகளான துவரம் பருப்பு, பருப்பு மற்றும் பயறு வகைகளின் உற்பத்தியும் முந்தைய பருவத்தை விட அதிகரித்துள்ளது... இதனால் விலைகளும் கட்டுக்குள் உள்ளது.. ஜூன் – செப்டம்பர் மாதங்களில் நல்ல பருவமழை பெய்யும் என்பதால், பருப்பு விலைகள் இனியும் அதிகரிக்காது என்றே தெரிகிறது.
விலைகள் அதிகரித்தாலோ அல்லது அரசு ஏதாவது ஒரு பொருளை வாங்குவது அதிகரித்தாலோ மட்டும்தான், பாரத் பிராண்ட் தயாரிப்புகள் மீண்டும் துவங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.. அதிகரித்த உற்பத்தி மற்றும் நிலையான விலைகளின் விளைவாக பாரத் பிராண்டை நிறுத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது என்றாலும், தேவைப்பட்டால் மத்திய அரசு தயாரிப்புகளை மீண்டும் ஆரம்பிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
More From
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications