‛நாடகம்’ என்ற அண்ணாமலை.. ‛உள்நோக்கம்’ என ஒரேபோடு போட்ட கேஎஸ் அழகிரி.. பரபர பாரத் ஜோடோ யாத்திரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரத் ஜோடோ யாத்திரையை நாடகம் என சகோதரர் அண்ணாமலை சொல்கிறார். காங்கிரஸில் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இது எங்கள் கட்சி. அண்ணாமலையின் பேச்சில் உள்நோக்கம் உள்ளது எனக்கூறி அவரை மாநில காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இன்று கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா'என்ற இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்கியது.

Bharat Jodo Yatra: There is no need for drama Congress Chief KS Alagiri Reply to BJP Chief Annamalai

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசியக்கொடியை ராகுலிடம் வழங்கி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கி வைத்தார். இன்று ராகுல் காந்தி 2வது நாள் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

கேஎஸ் அழகிரி பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பத்திரிகையாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது தான் காந்தியம். வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என மகாத்மா காந்தி கூறினார். ஒருபுறம் சர்ச் இருக்கிறது. இன்னொரு புறம் மசூதி, இந்து கோவில், பவுத்தகோவில் உள்ளது. சீக்கியர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவுடன் சண்டை வந்தால் அனைவரும் துப்பாக்கி ஏந்தி சண்டையிடுகிறார்கள்கள். இதுதான் இந்தியா. இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என மகாத்மா காந்தி சொன்னார்.

ஆனால் காந்தியின் கொள்கைக்கு நேர்எதிராக ஆர்எஸ்எஸ் கொள்கை உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கை என்பது 4 முதல் 5 பகுதிகளாக மக்களை பிரித்து வைத்துள்ளது. மிக உயர்ந்தவர்கள், இடைப்பட்ட சமூகத்தினர், நடுசமூகத்தை சார்ந்தவர்கள், அதற்கு கீழே இருக்கிறவர்கள் என மக்களை பிரித்து வைத்துள்ளது. இந்த பிரிவினை வேண்டாம். இந்த பிரிவினை அவர்களின் தொழிலில் இருக்கலாம். ஆனால் மனதில் இருக்கக்கூடாது. யார் எந்த தொழில் செய்தாலும் பிரிவினை இன்றி அனைவரும் சமம் என்பது தான் காங்கிரஸின் கொள்கை.

பிரதமர் மோடி மூலம் ஆர்எஸ்எஸ் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் ஒரே வழிபாடு என சொல்கிறார். இது இந்தியாவுக்கு பொருந்தாது. இந்தியாவில் ஏராளமான மொழி, இறை வழிபாடு உள்ளது. எனவே இதுபோன்று ஏராளமான வித்தியாசங்களை ஒன்று சேர்ப்பது தான் காங்கிரஸின் கொள்கை. இதை மீண்டும் நிலைநாட்டுவதற்காக மக்கள் மனதில் வேகமாக வேரூன்ற செய்வததற்காக தான் ராகுல்காந்தி நடைப்பயணம் ஆரம்பித்துள்ளார்.

இதனை நாடகம் என சகோதரர் அண்ணாமலை சொல்கிறார். காங்கிரஸில் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இது எங்கள் கட்சி. ராகுல்காந்தி தலைவராக வேண்டாம் என சொல்லும் ஒருவரும் காங்கிரஸில் இல்லை. அப்படி யாராவது இருந்தால் சொல்ல முடியுமா?. மகாத்மா காந்தி ஒருமுறை தான் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அதன்பிறகு இறந்துபோகும் வரை அவர் தலைவராக இல்லை. இருப்பினும் மக்கள் அவரை தான் தலைவராக கூறினார்கள். அதேபோல் தான் ராகுல்காந்தி. ஒருமுறை அவர் தலைவராக உள்ளார். இனி அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ராகுல்காந்தி இருக்கும் வரை அவர் தான் காங்கிரஸ் தலைவர். பாஜகவில் மோடியா தலைவராக உள்ளார். இன்னொருவர் தான் தலைவராக உள்ளார். இந்த கேள்வியை எங்களை நோக்கி கேட்பதில் உள்நோக்கம் உள்ளது. வலிமையான இந்தியாவை உருவாக்க ராகுல்காந்தி நடைப்பயணம் செய்கிறார். இந்த பயணம் மகத்தான வெற்றியை அளிக்கும்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+