தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாட்டம்- சென்னையில் கடும் புகை மூட்டம்!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அச்சத்துக்கு மத்தியில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிக்கப்படுவதால் சென்னையில் புகைமூட்டம் அதிகரித்துள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படும், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகையை முன்னிட்டு தமிழர்கள் இன்று வீடுகளில் உள்ள பழைய பொருட்களை வீதிகளில் கொட்டி எரித்தனர். நகரங்களில், கிராமங்களில் சிறிய பறைகளை முழங்கியபடி சிறுவர்கள் தெருக்களில் வலம் வந்தனர்.

சென்னையில் போகி பண்டிகையின் போது பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் புகை மூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் சென்னை நகரில் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
Recommended Video

போகி பண்டிகையின் போது வீடுகளில் மாலைகளில் காப்பு கட்டும் நிகழ்வு நடைபெறும். இதற்கான ஆவாரம்பூ உள்ளிட்டவைகளின் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

போகி பண்டிகையைத் தொடர்ந்து நாளை பொங்கல் திருநாளும் நாளை மறுநாள் மாட்டுப் பொங்கலும் ஜனவரி 16ல் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாக்களை முன்னிட்டு கிராமங்கள் களைகட்டி உள்ளன.
மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழாக்களுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications