"பச்சை தமிழன்" ராகுல் காந்தி.. கருகுகிறதா தாமரை?.. திடீரென பதறிப்போய்.. ஆமா, யார் அந்த பெண் லீலா..!
: 4வது நாள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
சென்னை: ராகுல்காந்தியின் பாதயாத்திரையானது, மிக அழுத்தமான முத்திரையை தமிழக மண்ணில் பதிப்பித்து வருவதை நம்மால் மறுக்க முடியாது..!
வழக்கமாக ராகுல்காந்தி தமிழகம் வந்தாலே, ஏதாவது ஒரு நுட்பமான தாக்கத்தை கட்டாயம் மக்களிடம் ஏற்படுத்திவிடும்.. சாதாரண நிகழ்வுகூட உருக்கமான தருணங்களாகிவிடும்.
இப்போதும் அப்படித்தான், அவரது பாதயாத்திரை முத்திரை பதித்து வருகிறது.. ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமான் கிண்டலடித்தாலும், இந்த நடைபயணத்தின் நுண்ணிய அரசியலை இப்போதைக்கு பலரால் புரிந்து கொள்ள முடியாது என்றே சொல்லலாம்.

வில்லேஜ் குக்கிங்
அரசியல் தாக்கங்களை இந்த யாத்திரை ஏற்படுத்தும் என்றாலும், தமிழக மக்களிடம் ராகுல் காந்திக்கான இமேஜ் உயர்ந்து கொண்டே செல்கிறது.. அன்று மண்பானை சட்டியில் கல்உப்பை போட்டு, சோறாக்கி அதன்மூலம் ஒரு கலக்கு கலக்கி சென்றபோது, அதற்கான அச்சாரத்தை போட்டுவிட்டார் ராகுல் காந்தி என்றே சொல்லலாம்.. அறந்தாங்கி அருகே உள்ள சின்ன வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த வில்லேஜ் குக்கிங் சேனல் சமையல் குழுவினருடன் இளைஞர்களுடன் சேர்ந்து சமையல் செய்த நிலையில், நேற்றைய தினம் அந்த குழுவினரையும் சந்தித்து பேசினார்... அந்த குழுவின் இருந்த வயதான ஒரு தாத்தாவை, கையில் பிடித்தவாறு உற்சாகமாக பேசிய வண்ணம் ராகுல்காந்தி நீண்ட தூரம் நடந்து சென்றது மிகுந்த கவனத்தை ஈர்த்தது.

அண்ணன்
ஒருமுறை புதுச்சேரிக்கு ராகுல் வந்தபோது, "யாரும் என்னை ராகுல்ஜின்னு பெயர் சொல்லாதீங்க.. சார்-ன்னும் கூப்பிடாதீங்க.. "அண்ணன்-ன்னு கூப்பிடுங்க" என்ற உரிமையை இளம்பெண்களுக்கு தந்தபோது, துள்ளி ஏகதித்து மகிழ்ந்தனர்.. அப்போது ஒரு பெண் ராகுலுடன் செல்பி எடுக்கும்போது, அவரது கையை பிடித்து கொண்டு குதித்ததும், கண்கலங்கி தவித்ததுமே அதன் அர்த்தங்களை உணர்த்தியிருந்தது.. இப்போது, ஏராளமான இளம்பெண்கள், மாணவிகள், குழந்தைகள் என பலரும் திரண்டு வந்து, ராகுலுக்கு வழிநெடுக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

இஞ்சி டீ
காங்கிரஸ் தொண்டர்கள், ராகுலுக்கு இளநீர் வெட்டி தந்து அன்பை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.. இதற்கு நடுவில் நேற்று திடீரென ஒரு டீக்கடையில் நுழைந்தார் ராகுல்காந்தி.. தோட்டியோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள டீ க்கடையில் டீ குடித்தார்... அப்போது அங்கிருந்த லீலா என்ற பெண்மணி, இஞ்சியை எடுத்து, நசுக்கி அதை டீயில் போட்டு, அவருக்காக சுடச்சுட டீ தயாரித்து தந்தார்.. அந்த டீயை ராகுல் குடிப்பதை, அவருக்கு பின்னால் நின்று ரசித்து பார்க்கிறார்.. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பதறிய ராகுல்
பிறகு, ஊராட்சிகளின் செயல்பாடுகளை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போது தென்காசி மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி தலைவர் ஏ.பி.டி. மகேந்திரன், ராகுல்காந்தி காலில் விழுந்து ஆசி பெற முயன்றார்... இதை பார்த்ததும் பதறிப்போய் தடுத்த ராகுல்காந்தி, "இப்படியெல்லாம் யாரும் காலில் விழ கூடாது... யாரையும் பெரிய ஆள் என்று பஞ்சாயத்து தலைவர் நினைத்தால், அதிகாரம் எப்படி உங்கள் கைக்கு வந்து சேரும்?" என்று கேள்வி கேட்டார்..

யாத்திரை
இந்திய வரலாற்றை பொறுத்தவரை, பெரும் தலைவர்களுக்கு பெரிதும் கைகொடுத்து உதவியுள்ளது இதுபோன்ற யாத்திரைகள்தான்.. காந்தியின் தண்டி யாத்திரை முதல் அத்வானியின் ரத யாத்திரை வரை இந்தியா ஏராளமான யாத்திரைகளை கண்டுள்ளது இந்த நாடு.. ஏன், நம் தமிழகத்தில்கூட, இந்தி திணிப்பு முதல் வைகோவின் பாதயாத்திரை வரை, அழியாத தடங்களை பதித்து சென்றுள்ளன.. இதன்மூலம் மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அதிர்வுகள் அதிகம்.. அந்தவகையில், ராகுலுக்கு இந்த யாத்திரை கைகொடுக்கும் என்கிறார்கள்.. விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், காங்கிரஸ் பக்கம் கவனத்தை ஈர்க்க இத்தகைய பெரிய அளவிலான நடைபயணங்கள் முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது..

வாதம் - விவாதம்
ராகுல்காந்தியின் இந்த நடைபயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய இன்னொரு காரணம், அது தமிழகத்தில் இருந்து துவக்கப்படுவதுதான்.. மக்கள் மீது இந்த நடைபயணங்கள் தாக்கம் ஏற்படுத்துகிறதோ, இல்லையோ எல்லோரும் இதுகுறித்து பேசுவதும், விவாதிப்பதும்கூட காங்கிரஸ் தரப்புக்கு வலு சேர்க்கும் என்கிறார்கள்.. பாஜக இப்போதே இந்த யாத்திரையை கிண்டலடித்தாலும், விலைவாசி உயர்வு போன்ற முக்கியமான பிரச்னைகளை எழுப்ப இந்த யாத்திரைதான் உதவிகரமாக இருக்கப்போகிறது என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ராஜீவ் + ராகுல்
காங்கிரஸை மீட்டெடுக்கும் வகையில், இந்த நடைபயண அரசியல் ஒருபக்கம் இருந்தாலும், ராகுலின் தமிழக வருகையானது, அரசியலையும் தண்டி, மக்கள் எளிதில் அணுகக்கூடிய, நெருங்கக்கூடிய, அன்பை பொழியக்கூடிய ஒரு தேசிய தலைவர் என்பதைதான் நிரூபித்து கொண்டிருக்கிறது.. இப்படித்தான் அன்று நேருவும் மக்கள் மனதை வென்றார்.. இப்படித்தான், இந்திராவும் மக்கள் மனதை வென்றார்... இப்படித்தான், ராஜீவ்வும் மக்கள் மனதை வென்றார்... இப்போது ராகுலும் வென்று வருகிறார்..!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications