Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் அடிச்சு தூக்குது.. உங்க வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்க்கிறீர்களா? இதோ கமிஷனர் போட்ட அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழி மூலம் உரிமம் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார். அதேசமயம், சென்னை மாநகராட்சியின் அதிரடிகள் தீவிரமாகி உள்ளன.

சென்னை மாநகரில் சமீபகாலமாகவே, நாய்களால் சிறுவர், சிறுமிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.. நாய்கள் கடித்ததால், உடம்பெல்லாம் படுகாயமேற்பட்டு, தீவிர சிகிச்சையிலும் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர.

Big Announcement from Tambaram Corporation and Online licensing of domesticated animals

ஆபத்து: வெளிநாட்டு நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் தற்போது அதனை, தெரு நாய்களை போல வெளியில் சுற்றவிட்டு வருவதே இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்கிறார்கள். இந்த நாய்களால்தான், பொதுமக்களுக்கு ஆபத்து எழுந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்..

இதையடுத்து, நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளதுடன், வளர்ப்பு நாய்களை முறையாக பராமரிக்கவும், விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவும் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள், மாநகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

ஆன்லைன்: இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு இணையவழி மூலம் உரிமம் வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ளதாவது: "பொதுசுகாதாரத்துறையின் பிரிவின் கீழ், 3 நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அனகாபுத்தூர், பாரதிபுரம் மற்றும் குண்டுமேடு ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களில் தெருநாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, வெறிநாய் கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

கால்நடை மையம்: அதனைத்தொடர்ந்து 1.2.2024 முதல் 30.4.2024 வரை 449 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு 437 தெருநாய்களுக்கு நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் கால்நடை மருத்துவ குழுவினரால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் வரை பராமரிக்கப்பட்டு, உடல் தகுதி பெற்ற பின் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு பிறகு பிடித்த இடத்திலேயே விடப்பட்டுள்ளது.

நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகள் வீடுகளில் வளர்க்கப்படும் நிலையில், இச்செல்ல பிராணிகள் பொது இடங்களில் உரிமையாளர்களால் அழைத்து செல்லப்படுகிறது. இவ்வாறான நிகழ்வில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும். மேலும், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளுக்கு அவற்றின் உரிமையாளார்கள் உரிமம் அவசியம் பெற்றிட வேண்டும்.

விண்ணப்பம்: நாய் மற்றும் பூனை ஆகிய செல்லபிராணிகளின் உரிமையாளர்கள் உரிமம் பெறுவதற்கு தாம்பரம் மாநகராட்சியின் https://tcmcpublichealth.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் உரிமையாளர்கள் 20.6.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை மாநகராட்சியின் பொது சுகாதார பிரிவு கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையின் மருத்துவர் குழு இணைந்து ஆய்வு செய்து ஒரு மாத காலத்திற்குள் உரிமச்சான்று மாநகராட்சி நகர்நல அலுவலர் அவர்களால் வழங்கப்படும். இதன் வாயிலாக தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட செல்லப் பிராணிகள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்படுவதன் மூலம் பொதுமக்களின் நலனை பாதுகாக்க உறுதி செய்யப்படும்.

செல்லப்பிராணிகள்: எனவே, தாம்பரம் மாநகராட்சியின் இணையதளத்தில் செல்லப்பிராணிகளின் விவரங்களை பதிவேற்றம் செய்து, தங்கள் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை பெற்று பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் அதிரடிகள் கூடுதலாகி வருகின்றன.. சென்னையில் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமம் கோரி மாநகராட்சி இணைய தளத்தில் விண்ணப்பித்து கொண்டிருக்கிறார்கள்.

அதன்படி, கடந்த மே 5 முதல் மே 22 வரை செல்லப்பிராணிகளுக்கு உரிமம் கோரி 12 ஆயிரத்து 539 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 2 ஆயிரத்து 617 பேருக்கு மட்டுமே இதுவரை லைசென்ஸ் தரப்பட்டுள்ளதாம்.. அந்த வகையில் 7 ஆயிரத்து 180 பேரின் விண்ணப்பங்கன்ள நிராகரிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால், இந்த விண்ணப்ப்ஙகள் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+