செங்கல்பட்டின் வரலாறு மாறுது.. பொத்தேரி ரயில் வருவாய் குவியுமே! ரூ.757 கோடி பிராஜக்ட்டை வரவேற்ற பாஜக
சென்னை: சென்னை தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ரெயில் பாதை திட்டத்துக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் ரூ.757.18 கோடியில் அமைய உள்ளது. இந்த புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டுள்ளார்.
எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் செல்லும் பிரதான பாதையான தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், நெரிசலைக் குறைக்கும் விதமாக 4வது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

ரயில்வே நிர்வாகம் நம்பிக்கை
30.02 கி.மீ. தூரமுள்ள இந்த 4வது ரயில் பாதை திட்டத்திற்கு ரூ. 757.18 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்த புதிய ரயில் பாதை அமைவதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்.. இதனை ரயில்வே நிர்வாகம் அறிக்கை மூலமாகவே தெரிவித்துள்ளது.
அதாவது, புதிதாக அமையவுள்ள இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் தற்போது 3 ரயில் பாதைகளில் பாதைகளில் மட்டுமே. இயக்கப்பட்டு வருகினற்ன.. இதனால் இந்த வழித்தடத்தின் பயன்பாடு வெறும் 87 சதவீதமாக உள்ளது.
சென்னைக்கு வரப்பிரசாதம் - பொத்தேரி
இப்போது 4வது பாதை அமைக்கப்பட்டால், ரயில்கள் நெரிசலின்றி இயங்குவதுடன், பயணிகளின் பயன்பாடும் 136 சதவீதமாக உயரும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்ல செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் சேவையை நீட்டிப்பதால், பயணிகளின் நெரிசலும் வெகுவாக குறையும்.. அந்தவகையில், தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இந்த திட்டம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு, பரந்தூர் ஏர்போர்ட் போன்றவை இனி அடுத்தடுத்து வரஉள்ள நிலையில், இந்த ரயில்பாதை பேருதவியாக இருக்கும்.
பொத்தேரியில் சரக்கு ரயில் போக்குவரத்தில் வருடத்துக்கு ரூ.157 கோடி அளவில் கூடுதல் வருவாயையும் ஈட்ட முடியும் என்று ரயில்வே நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
நயினார் நாகேந்திரன் வரவேற்பு
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதனை வரவேற்றுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
"பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைத்து புறநகர் இரயில் இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.757.18 கோடி மதிப்பீட்டில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4-வது ர
ரெயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இப்புதிய தடத்தால், ஆண்டுக்கு 1.344 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு, ரூ.157 கோடி கூடுதல் வருவாய் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தொடர்ந்து தமிழகத்தின் ரெயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்தி வளர்ச்சிக்குத் தொடர்ந்து வித்திடும் நமது பாரதப் பிரதமர் மோடிக்கும், மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கும் தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மகிழ்ச்சியுடன் அதில் தெரிவித்துள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications