ஸ்டாலினுக்கு ‘செம’ சான்ஸ்.. பாஜக ஏவும் 'அஸ்திரம்'.. மாட்டிக்கொண்ட 3 கட்சிகள்.. போட்டு உடைக்கும் மணி!

காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதில் ஸ்டாலினுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்துப் பேசியுள்ளார் பத்திரிகையாளர் மணி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : பாஜக 3 கட்சிகளுக்கு செக் வைத்துள்ளது. இந்த 3 கட்சிகளுடனும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நல்லுறவில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடனும் நல்ல உறவில் நீடிக்கிறார். எனவே, மோடிக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவதில் ஸ்டாலினுக்கு ஒரு அருமையான வாய்ப்பு இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் மணி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜகவை எதிர்க்க வேண்டுமானால், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் மெகா கூட்டணி அமைவது அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

இந்த கூட்டணி அமைவதில், பாஜக ஏற்படுத்தும் முட்டுக்கட்டைகள் குறித்தும், இந்த கூட்டணியை கட்டமைப்பதில் ஸ்டாலினுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்தும் பேசியுள்ளார் பத்திரிகையாளர் மணி.

பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே

பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே

கேள்வி : பாஜகக்கு எதிராக அமையும் கூட்டணியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டியது அவசியமா?

மணி : 2004ல் வாஜ்பாய்க்கு எதிராக பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தாமல் தான் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது, என நேற்று வரை நான் சொல்லி வந்தேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் பல அரசியல் தலைவர்களுடன் பேசியதில் எனது கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் வேட்பாளர் அறிவிக்காமல் இருப்பது பலவீனம் தான். பிரதமர் மோடிக்கு எதிரான வலுவான தலைவரை அடையாளம் காட்டாமல் மோடியை வீழ்த்துவது கடினம் என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் சாத்தியம் தான். ஒரு பவர்ஃபுல் லீடர் என்ற பிம்பம் மோடிக்கு இருக்கிறது. குறைந்தபட்சம் அதைப் போன்ற ஒரு பிம்பமாவது கட்டமைக்கப்படும் தலைவர் எதிர் தரப்பிலும் தேவை.

 3ல் ஒரு பங்கு

3ல் ஒரு பங்கு

வட இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற நிறுவனம் 2019ல் எடுத்த சர்வேயில், பாஜக மிகுந்த வலிமையோடு இருக்கக்கூடிய மாநிலங்களில், பாஜகவுக்கு வாக்களித்த மக்களில் 3ல் ஒரு பங்கு வாக்காளர்கள் பிரதமர் மோடிக்காகவே வாக்களித்தோம் என்று சொல்கிறார்கள். ஒரு தனி மனிதரை நம்பி நாடோ, கட்சியோ இருக்க முடியாது என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், அதேசமயம், தனி நபர்களின் பாத்திரம் வரலாற்றில் வலிமை வாய்ந்தது. மீடியா, அரசு அமைப்புகள் என எல்லாம் நரேந்திர மோடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அளவுக்கு முழுமையாக அதிகாரத்தைச் சுவைத்த தலைவர் இந்திய வரலாற்றிலேயே இல்லை. மக்களே இதனை ரசிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது பிரச்சனை இன்னும் ஆழமானது. எதிர் தரப்பில் மோடியை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைமையேற்று நடத்தினால் மட்டுமே முடியும்.

 100 சீட்களை தாண்டினால்

100 சீட்களை தாண்டினால்

காங்கிரஸ் கட்சி தனியாக பாஜகவை வீழ்த்துவது என்பது அறவே சாத்தியமற்றது. காங்கிரஸ் அல்லாத ஒரு கூட்டணியை அமைத்தாலும் அது ஃபெயிலியர் தான். காங்கிரஸ் இல்லாமல் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து நிற்பது பாஜகவுக்கு சாதகமாகிவிடும். எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான். 2019ல் 37 சதவீதம் ஓட்டு வாங்கிய பாஜக 303 சீட்களைப் பிடித்தது. அதில் சரிபாதியான 19% வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி 55 சீட்களை மட்டுமே பெற்றது. 100 சீட்களை காங்கிரஸ் தாண்டிவிட்டால் காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி.

ஸ்டாலினால் முடியுமா?

ஸ்டாலினால் முடியுமா?

கேள்வி : 2019ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று முதலில் சொன்னவர் ஸ்டாலின். ஆனால், காங்கிரஸ் தலைமையேற்பதில் மற்ற கட்சிகளுக்கு பிரச்சனை இருக்கிறது. அவர்கள் எல்லோரையும் காங்கிரஸின் குடைக்குக் கீழ் ஸ்டாலினால் எப்படி கொண்டு வர முடியும்?

மணி : தேர்தலுக்கு முன்னால், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கட்சிகளை இணைப்பது கடினம் தான். தேர்தலுக்கு முன்பு முடிந்தவரை கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டும். பிஆர்எஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளோடு, தேர்தலுக்குப் பிறகு தான் காங்கிரஸ் கட்சி இணக்கமாக வாய்ப்புள்ளது. இன்றைய ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் இந்த 3 கட்சிகளில் இருந்து எந்த தலைவரும் பங்கேற்கவில்லை. இது மிகப்பெரிய கேள்விக்குறி. காங்கிரஸ் கட்சியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருந்த மம்தா திடீரென பல்டியடித்து தேர்தலை புறக்கணிக்கிறேன் என்று சொன்னார். அப்போதே அவர் தடம் புரண்டுவிட்டார் என்பது தெரிந்தது.

தடம் புரண்ட திரிணாமுல்

தடம் புரண்ட திரிணாமுல்

நாள்தோறும் மம்தாவுக்கு தொல்லை கொடுத்து வந்த பாஜக அரசு கடந்த 6 மாதங்களாக மௌனம் காக்கிறது. பெரிய அளவில் எந்த பிரச்சனையும் செய்யவில்லை. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் டிஎம்சி கலந்துகொள்ளாதது இதன் தொடர்ச்சியாகக்கூட பார்க்கலாம். மேற்கு வங்கத்தில் 42 எம்.பி சீட்கள் உள்ளன. மம்தா பானர்ஜி ஆதரவு இல்லாமல, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது அறவே சாத்தியமில்லை. அதேபோல, கேசிஆர், கெஜ்ரிவால் ஆதரவும் இல்லாமல் காங்கிரஸால் வலிமை பெற முடியாது. இந்த 3 கட்சிகளும், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம் என உறுதி செய்தால் மோடி வீழ்த்தப்படுவது உறுதி. மம்தாவை பாஜக கிட்டத்தட்ட உடைத்து எடுத்துவிட்டது. ஆம் ஆத்மி கட்சியின் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார், அந்த வழக்கில் கேசிஆரின் மகள் கவிதாவும் சிபிஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார். 3 கட்சிகளுக்கும் இப்படி நெருக்கடி தருகிறது பாஜக.

ஸ்டாலினுக்கு செம சான்ஸ்

ஸ்டாலினுக்கு செம சான்ஸ்

எங்களை எதிர்த்து என்ன அரசியல் வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்கக்கூடாது என்பதுதான் பாஜக அவர்களுக்கு வைக்கும் செக். இந்த 3 கட்சிகளுடனும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நல்லுறவில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியுடனும் நல்ல உறவில் நீடிக்கிறார். எனவேதான், மோடிக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவதில் ஸ்டாலினுக்கு ஒரு அருமையான வாய்ப்பு இருக்கிறது. மம்தா எதிர்க்கட்சி ஒற்றுமையில் இருந்து இன்று விலகி நிற்பது போல மற்ற கட்சிகளும் சின்னாபின்னம் ஆக்கப்பட்டால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது கேலிக்கூத்தாகிவிடும். அதனை தடுத்து காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்தும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+