Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தூக்குங்க அவரை".. அதிமுகவை விடுங்க.. கண்சிவந்த மேலிடம்.. யாரந்த பாஜக புள்ளிகள்.. தடதடக்கும் "தெற்கு"

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க போகிறதா? இல்லையா? என்ற குழப்பங்கள் நிலவிவரும் நிலையில், தமிழக பாஜக அடுத்தடுத்த அதிரடிகளை கையில் எடுத்துள்ளது.

தற்போது அதிமுக- பாஜக இடையே பனிப்போர் நடந்து வரும் நிலையில், வெளிப்படையான சுமூக சூழல் நிலவவில்லை என்றே தெரிகிறது..

காரணம், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் மூத்த தலைவர் விபி துரைசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

 கூலிங் கிளாஸ்

கூலிங் கிளாஸ்

அதற்கு அவர், "கருப்பு எம்ஜிஆர், சிகப்பு எம்ஜிஆர் என வந்துள்ளார்கள். நேற்றைக்கு ஒரு எம்ஜிஆர் வந்துள்ளார். இப்படி பல எம்ஜிஆர்களை பார்த்து உள்ளோம். தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டால் எம்ஜிஆர் என்றால் நீங்கள் கூட முயற்சி செய்யலாம். நாங்கள் பார்த்தது எல்லாம் ஒரே ஒரு எம்ஜிஆரைத்தான்" என்று எடப்பாடியை மறைமுகமாக விமர்சித்திருந்தார். ஆனால், நேற்றைய தினம் ஒரு டிவி சேனல் பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்" என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்..

சுயபரிசோதனை

சுயபரிசோதனை

அதிமுக குறித்து, பாஜகவுக்குள்ளேயே முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும், மாநில தலைவர் அண்ணாமலை என்ன யோசிக்கிறார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. வரப்போகும் எம்பி தேர்தலில் தமிழகத்துக்கு பரிசோதனை தேவையா? அல்லது சீட் தேவையா? என்பதிலும் தெளிவு வேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை.. அதாவது, பரிசோதனை என்றால் தனியாகவே நின்று பலத்தை காட்டுவது.. அது தென்மண்டலமாக என்றாலும் சரி, தனித்தே களமிறங்கினால்தான், ஒரு கட்சியின் பலம் என்ன என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள முடியும்.. எனவே, துணிந்து களமிறங்குவோம் என்கிறார் அண்ணாமலை..

 தீய சக்தி

தீய சக்தி

அதுமட்டுமல்ல, அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது குறித்து சில தகவல்களையும் மேலிடத்தில் பகிர்ந்திருக்கிறாராம்.. அதாவது, "எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்து அதிமுக இப்போது இல்லை. அதிமுக என்ற கட்சி உருவானதும் 30 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் முக்கிய காரணமே திமுக எதிர்ப்பு தான். திமுகவை திமுக தீய சக்தி என்றும், திமுகவினரை பகையாளர்களாக கருதியுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மாறி மாறி அரசியல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவானது, இன்னொரு திமுகவாக மாறிவிட்டது..

அருந்ததிகள்

அருந்ததிகள்

இதனால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காது.. மேலும், எம்ஜிஆர்- ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், முத்தரையர்கள் , பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது... இதைதவிர, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகியோர் பிரிந்து நிற்பதால் இந்த பாதிப்பு ஏற்படும்.. இதை கருத்தில் கொண்டு, கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று மேலிட தலைவர்களிடம் சொன்னாராம் அண்ணாமலை... ஒருவேளை தனித்து போட்டி இல்லாவிட்டால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்பது தவிர்க்க முடியாதது என்றும் சொன்னாராம். ஆக, இந்த 2 முடிவுகளில் மேலிடம் எதை பரிசீலிக்க போகிறது என்று தெரியவில்லை..

 களையெடுப்பு

களையெடுப்பு

எனினும், பாஜக தனித்து நின்றாலும்கூட, அதற்கான பலத்தை பெருக்க வேண்டும் என்ற கட்டாயம் கட்சிக்கு ஏற்பட்டுள்ளதால், அதற்கான களையெடுப்பும் மிக மிக அவசியம் என்பதை மாநில தலைமை நன்றாகவே உணர்ந்துள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் களையெடுப்பு பணி துவங்கியது.. நிர்வாக பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுவதாக அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருந்தார்.. இதனால் மாவட்டங்களில் கலக்கங்கள் சூழ்ந்தன.. இப்போது, மேலும் சில மாவட்டங்களில் களையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளாராம் அண்ணாமலை.. அந்தவகையில், தென்மாவட்டங்கள் பலவற்றில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியில்லை என்று தலைமை கருதுகிறதாம்.

 நடைபயணம்

நடைபயணம்

அந்தவகையில், 3 விதமான புகார்கள் தற்போது வெடித்து கிளம்பி உள்ளன.. பல்வேறு மாவட்டங்களில் பூத்கமிட்டிகளில் ஆட்களை இன்னும் அமைக்காமலேயே உள்ளார்களாம்.. அதேபோல, சில மாவட்டங்களில் அணிகள், பிரிவுகளின் நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துவிட்டு, அவர்களின் செயல்பாடுகளையும் கவனிக்காமல் இருப்பதாகவும் தெரிகிறது.. இதைதவிர, புதியவர்களை கட்சிக்குள் கொண்டு வரும் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாம்.. இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்ட அண்ணாமலை, ஏப்ரல் 14ம் தேதி நடைபயணம் துவங்கப்போவதாக அறிவித்திருக்கும் நிலையில், அதை நடைமுறைப்படுத்தும் முன்பு, இவைகளில் கவனம் செலுத்த போகிறாராம்.

 தடதட தெற்கு

தடதட தெற்கு

பூத் அளவில் கட்டமைப்பு வலுவாக இருந்தால்தான் திமுக போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்பதால்தான், இந்த விஷயத்தை முதலிலேயே கையில் எடுக்க போகிறாராம்.. அதுமட்டுமல்ல, பூத் கமிட்டிகளில் ஆட்களை நியமிக்காதது, உறுப்பினர் சேர்க்கைகளில் மந்தம், போன்ற காரணங்களினால், தென்மாவட்ட மாநில நிர்வாகிகள் சிலர் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் தெரிவதால், தென்பகுதியில் மொத்தம் 15 மாவட்டங்களில் நிர்வாகிகளை களையெடுக்க முடிவெடுத்துள்ளதாக பாஜக தரப்பில் கூறப்படுகிறது.. இதனால் தென்மாவட்ட பாஜக தரப்பில் கலக்கம் சூழ்ந்துள்ளதாம்..!!!

டீல் ஓகே

டீல் ஓகே

இதனிடையே, இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. அமமுகவுக்கு முக்கிய அசைன்மென்ட்டை அண்ணாமலை தரப்பு தந்துள்ளதாக தெரிகிறது.. "எடப்பாடி பழனிசாமியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை. அதனால், நீங்கள் களத்தில் இறங்குங்கள், நாங்கள் துணையாக இருக்கிறோம் என்று தினகரனிடம் சொல்லப்பட்டதாம்.. இதற்கு தினகரனும் பச்சைக்கொடி காட்டி உள்ளார்.. அந்தவகையில், ஏப்ரல் 11-ம் தேதி தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்கவும் தயாராகி வருகிறாராம்.. தென்மண்டலமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றுக்கும் ஏற்பாட்டு செய்யப்படுகிறதாம்... இந்த கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து எடப்பாடிக்கு ஷாக் தர போகிறார்களாம். அதாவது, திமுகவை ஒருபக்கம் டேமேஜ் செய்துகொண்டே, அதிமுகவையும் பலவீனப்படுத்தும் வியூகத்தைதான், தற்சமயம் பாஜக செயல்படுத்த போகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+