Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ராஜா + 3 கட்சி.. உருவான "முக்கோண இடி".. இதுக்கு கம்மியா சீட் கேட்டிருக்கலாமே? உள்ளதும் போச்சா? அட

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, பாஜகவில் கூட்டணி முடிவாகாத நிலையில், தேமுதிக என்ன செய்ய போகிறது? யாருடன் இணைய போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இது தொடர்பாக பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதையடுத்து, தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. தங்கள் கூட்டணி கட்சியோடு தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையையும் தீவிரப்படுத்தி வருகின்றன..

Big Expectation from Premalatha and what are the aiadmk, bjps, DMDK Alliance Strategy over 3 rajya sabha seats

அந்த வகையில் திமுக லீடிங்கில் உள்ளது.. தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு, 2வது கட்ட பேச்சுவார்த்தையையும் ஆரம்பிக்க போகிறது. இப்போதைக்கு கூட்டணியில் பலமாகவும், வேகமாகவும் உள்ளது திமுக என்றே சொல்லலாம்.

கூட்டணி முடிவு: ஆனால், அதிமுக, பாஜகவில் இன்னும் கூட்டணி முடிவாகவில்லை.. இவர்களுடன் ஏற்கனவே கூட்டணியிலிருந்த ஜிகே வாசன் போன்ற தலைவர்கள், அதிமுக, பாஜக என யார் பக்கம் செல்வது என தெரியாமல் குழம்பி உள்ளனர்... இதில், பாமக, தேமுதிகவும், அதிமுக, பாஜகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.. 2 கட்சிகளும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்ததால், தங்களது தொகுதி தொடர்பான எதிர்பார்ப்பை பாமக, தேமுதிக அதிகரித்துவிட்டது..

அதாவது பாமக 12 தொகுதியும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் கேட்பதாக தெரிகிறது. ஆனால், தேமுதிகவோ, தேமுதிக 14 + 1 என்று அறிவித்து, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பகீரை கிளப்பிவிட்டது. ஆனால், தேமுதிக இப்படி அறிவித்த கையோடு, அதிமுக மற்றும் பாஜக, தங்களால் இவ்வளவு தொகுதி தரமுடியாது என்று சொல்லிவிட்டதாக தெரிகிறது.

4 சீட் தானா: அப்படியிருந்தும்கூட, தேமுதிகவிற்கு 4 சீட் வரை அதிமுக தருவதாக நினைக்கிறது.. சீட் விவகாரத்தில் முன்பின் வித்தியாசம் இருந்தாலும், மாநிலங்களவை சீட் தருவதற்கு சான்ஸே இல்லை என்று கூறிவிட்டதாம். இது தொடர்பான ஒரு பிரத்யேகமான செய்திதான் நமக்கு இப்போது கிடைத்துள்ளது.

அதாவது, 14+1 என்று பிரேமலதா அறிவித்த மாத்திரத்தில், அக்கட்சியுடன் பேசுவதையே நிறுத்துங்கள் என்று மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி 3 பேருக்கும் உத்தரவு போட்டுவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி... அதனால்தான், பேச்சுவார்த்தைக்கு அழைக்கலாம் என்ற யோசனையையும் கைவிட்டுவிட்டார்களாம்.

சாராம்சம்: இதனை தாமதமாக உணர்ந்த பிரேமலதா, 14 சீட் என்பது கட்சியினர் சொன்ன யோசனை... ஆனால், இறுதி முடிவை எடுக்க எனக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். அதேசமயம், ராஜ்யசபா கேட்பது எங்கள் உரிமை" என்று சொல்லி அதாலடி காட்டினார்..

அதுமட்டுமல்ல, அதிமுக, பாஜக 2 கட்சிகளின் தலைமை க்கும் சுதீஷ் மூலம் தகவலையும் தந்தாராம் பிரேமலதா. அதாவது, "14 சீட் என்பதில் யோசிக்க வேண்டாம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுங்கள், வருகிறோம், பேசலாம்" என்பதே அந்த தகவலின் சாராம்சமாம்..

ராஜ்யசபா சீட்: ஆனால், இதற்கு ரிட்டன் தகவலாக, "ராஜ்யசபா கோரிக்கையை கைவிட்டுவிட்டால் வாருங்கள், பேசலாம். அந்த கோரிக்கையுடன் தான் வருவீர்கள் என்றால், வர வேண்டாம்... ராஜ்யசபா சீட் கேட்பது உங்கள் உரிமை என்பதெல்லாம் எப்படி என்பது எங்களுக்குப் புரியவில்லை... ராஜ்யசபா சீட் கோரிக்கையை கைவிடுங்கள்" என்று தெளிவுப்படுத்தி விட்டனவாம்..

இதையெல்லாம் சொல்லி 1 வாரமாகிவிட்டதாம். ஆனால், பிரேமலதாவிடமிருந்து மீண்டும் பதில் வராததால், தேமுதிகவை அழைக்க வேண்டாம் என்கிற முடிவில் அதிமுக, பாஜக இருக்கின்றனவாம்..

என்ன முடிவு: அதேசமயம், ராஜ்யசபா கோரிக்கையை கைவிடும் பட்சத்தில், அதிமுக, பாஜக இரு கட்சிகளும் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கவே முடிவு செய்துள்ளனவாம்.. இந்த 2 சீட்களை பெற்றுக் கொள்ள தேமுதிக முன்வருமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+