"கெடு ஸ்டார்ட்".. ஐஏஎஸ் இறையன்புக்கு டெல்லியில் இருந்து பறந்து வந்த உத்தரவு.. என்ன நடந்தது..?
தமிழக அரசின் தலைமை செயலாளர்கள் விளக்கம் அளிக்க NCPCR உத்தரவிட்டுள்ளது
சென்னை: பள்ளியில் மதமாற்றம் நடப்பதாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து தலைமை செயலாளர் விளக்கம் அளிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) உத்தரவிட்டுள்ளது.
பாஜக ஆட்சி அமைத்தது முதலே, மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சியினர் எழுப்பி வருகின்றனர்.
அதனால்தான், சமீபத்தில் தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், பாஜகவினர் அதீத ஆர்வம் காட்டியதுடன், மதமாற்ற முயற்சியே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லி மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

மதமாற்றம்
அதற்கு அதற்கு பிறகு நடந்த விசாரணையில், அப்படி எதுவுமே நடக்கவில்லை என தெரியவந்தது. இப்படிப்பட்ட சூழலில் சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மதமாற்றம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் சிஎஸ்ஐ மோனஹன் மகளிர் பள்ளி ஹாஸ்டலில் இப்படியான மதமாற்றம் நடப்பதாகவும், ஆனால், இதுகுறித்து புகார் தந்தும், தலைமைச்செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.. அதனால், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹாஸ்டல்
அந்த கடிதம் இதுதான்: "ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோனஹன் மகளிர் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சிறப்புக் குழு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில், ஏழைக்குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை விடுதிக்கு அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரிய வந்துள்ளது. அந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது. அவர்களை உடனே மீட்க வேண்டும். மேலும், அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது.

TIME + கெடு
அதனால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும். அத்துடன் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.. சென்னையில் பிரபலமான பள்ளி ஹாஸ்டலில் உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்று டிஜிபிக்கும், தலைமைச் செயலாளருக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையமே கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இறையன்பு IAS
இதனிடையே, சம்மந்தப்பட்ட ராயப்பேட்டை மோனஹன் பள்ளியில் மதமாற்ற முயற்சி ஏதும் கண்டறியப்படவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 20-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆன்லைனில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதால் எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றன. தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் ஆணைய உறுப்பினர் சரண்யா ஜெய்குமார் ஆகிய இருவரும் தமிழ்நாடு ஆளுநர் ரவியை சந்தித்து, ஆய்வு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத இல்லம் சம்பந்தப்பட்ட 85 பக்கம் கொண்ட அறிக்கையினை நேரில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications