சென்னை மக்களுக்கு "ஹேப்பி நியூஸ்".. ஒன்றல்ல.. இனி ரெண்டாமே.. அமைச்சர் அதிரடி.. மளமளவென துவங்கிய பணி
சென்னையில் 2வது ஏர்போர்ட் அமைய ஏற்பாடுகள் ஆரம்பமாகி உள்ளன
சென்னை: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, ஜரூர் பணிகள் ஆரம்பமாகி உள்ளன.
வருடத்துக்கு 4 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டது நம்முடைய சென்னை விமான நிலையம். அதனால், சென்னையில் 2வது விமான நிலையத்தை அமைக்க விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடந்த சில வருடங்களாகவே திட்டமிட்டு வருகிறது.
மேலும், 'சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.

ஏர்போர்ட்
எனவே, இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே விமான போக்குவரத்து அமைச்சகத்திடமும் முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த விமான நிலையம் அமைப்பதற்கு, 2 ஆயிரம் ஏக்கர் வரையிலான நிலம் தேவைப்பட்டது.. அந்த இடத்தை இறுதி செய்யும்படி விமான போக்குவரத்து துறை தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையத்தை அமைக்கலாம் என்ற திட்டம் முதலில் பரிசீலனையில் இருந்தது.

சிந்தியா
பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டு, உத்திரமேரூரில் ஏர்போர்ட் அமைக்க போதிய வசதிகள் உள்ளனவா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.. பின்னர், மதுராந்தகம், கும்மிடிப்பூண்டி பகுதிகளிலும் அத்திட்டம் பரிசீலனையில் இருந்தது.. இந்நிலையில், புது ஏர்போர்ட் குறித்து, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்..

2வது ஏர்போர்ட்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம பேசிய அவர், "சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு, ஆசை. இதற்காக சென்னை அருகே இரண்டு இடங்கள் தேர்வாகி உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளான பன்னுார் அல்லது பரந்துாரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பரிந்துரைத்துள்ளது.. வரும் செப்டம்பரில் இதற்கான பணிகள் துவங்கி, 2024க்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது.

தென்னரசு
இதுதொடர்பாக டெல்லியில் வரும் 16ம் தேதி, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.. இந்தக் கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்க உள்ளார்" என்று சிந்தியா தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே பேச்சளவில் இருந்த, சென்னையின் 2வது ஏர்போர்ட் விவகாரம் தற்போது வேகம் எடுத்துள்ளது, சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications