சூப்பர் மார்க்கெட் எல்லாம் ஓரம் போ.. ரேஷன் கடைகளில் வரும் மெகா மாற்றம்.. தமிழக மக்கள் ஏக குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு சார்பாக திறக்கப்படும் முன்மாதிரி ரேஷன் கடைகள் குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன.

 BIG NEWS: Super announcement for Ration Shops users in Tamil Nadu

பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு சார்பாக திறக்கப்படும் முன்மாதிரி ரேஷன் கடைகள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

அதன்படி முதல் கட்டமாக விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இந்த ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன . ரங்கநாதன் சாலையில் இந்த கடைகள் நேற்று திறக்கப்பட்டது.

ரேஷன் கடைகள் சாதாரண ரேஷன் கடைகள் போல இல்லாமல், ஒரு சூப்பர் மார்க்கெட் போல இருந்தால் எப்படி இருக்கும்? சூப்பர் மார்க்கெட் போல எல்லா பொருட்களும் ரேஷன் கடையில் கிடைத்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட ரேஷன் கடைகள்தான் முன்மாதிரி ரேஷன் கடைகள் ஆகும்.

இது போன்ற முன்மாதிரி ரேஷன் கடைகளில் எல்லாவிதமான பொருட்களும் ஒரே இடத்தில கிடைக்கும். கூட்டுறவுத்துறையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கே கிடைக்கும். பொதுவாக ரேஷன் கடைகளில் பருப்பு, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொதுவான பொருட்கள் மட்டுமே கிடைக்கும்.

ஆனால் இங்கே மளிகை பொருட்கள், இனிப்பு வகைகள், சோப்பு, ஷாம்பு, பிஸ்கெட் பொருட்கள், சாக்லேட்டுகள், ஜூஸ்கள், பேஸ்ட் வகைகள், பல்வேறு வகையான எண்ணெய் பொருட்கள் என்று அனைத்து விதமான சூப்பர் மார்க்கெட் பொருட்களும் இங்கே கிடைக்கும். மொத்தம் 255 வகையான பொருட்கள் இங்கே கிடைக்கும்.

இங்கே சூப்பர் மார்கெட்டுகள் போல கேமராக்கள் கூட இருக்கும். பொதுவாக ரேஷன் கடைகளில் ஆலோசனைகளை பெற முடியாது. புகார்களையும் கொடுக்க முடியாது. ஆனால் இந்த முன் மாதிரி ரேஷன் கடைகளில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு உள்ளன.

 BIG NEWS: Super announcement for Ration Shops users in Tamil Nadu

முதல் கட்டமாக விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இந்த ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன . விரைவில் மற்ற மாவட்டங்களில் இந்த ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றங்கள்:

ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

சமீபத்தில்தான் 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்க மக்கள் தங்கள் கருவிழிகளை பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட உள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் கைரேகையைப் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.

இதை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள். புதிய திட்டத்தின்படி மக்கள் தங்கள் கண்களை காட்ட வேண்டும். இதை லேசர் கருவிகள் பதிவு செய்யும். கண் கருவிழி பதிவுகள் மூலம் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க முடியும்.

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடப்படுவது தடுக்கப்படும். கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பதிவு செய்து பொருட்கள் வழங்கும் திட்டம் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது.

இதை தொடர்ச்சியாக வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரேஷன் பொருட்கள் திருடப்படுவது குறையும். ரேஷன் பொருட்களை மக்கள் வாங்காத நிலையில், அதை வாங்கியதாக கூறி ஏமாற்றி வெளியே விற்கும் பழக்கம் குறையும்.

வாங்கப்படாத ரேஷன் பொருட்கள் மீண்டும் கிடங்கிற்கே செல்லும் முறையை கொண்டு வர முடியும். தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள்.

முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் திருட்டும் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+