"ஸ்பை".. ரேஷனில் இருந்து இனி எதுவும் தப்ப முடியாது.. ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு திருட்டை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று அரசு மேற்கொண்ட நடவடிக்கை தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் அரிசு, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் அட்டை ரீதியாக வழங்கப்பட்டது. அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்த நிலையில் ரேஷன் கடைகளில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக கடந்த 6 மாதங்களாக ரேஷன் கடைகள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான எஸ்ஓபி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டது. அதன்பின் ரேஷனில் அரிசி ஆனாலும் சரி.. பருப்பு ஆனாலும் சரி.. சர்க்கரை ஆனாலும் சரி.. அனைத்தையும் இனி பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.
அதேபோல் தமிழ்நாட்டில் அரிசி ஆலைகள் விரைவில் அதிகம் தொடங்கப்படும். 12 புதிய இடங்களில் அரிசி ஆலைகள் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மக்கள் எளிதாக தாங்கள் விளைவித்த அரிசியை கொண்டு சேர்க்க முடியும். அதேபோல் ரேஷன் கடைகள் சீரமைக்கப்படும் என்றும் ரேஷன் சார்பாக அறிவிக்கப்பட்டது.
நடவடிக்கை: இதற்கு இடையில்தான் தமிழ்நாடு ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு திருட்டை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் பொருட்கள் அடிக்கடி திருடப்படுவதாக புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு செல்ல வேண்டிய பொருட்களை சிலர் திருடி அண்டை மாநிலங்களில் விற்று வருகிறார்கள்.
முக்கியமாக கேரளா, ஆந்திராவில் அதிக விலைக்கு இந்த பொருட்களை விற்பனை செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
க்யூ ஆர் கோடு: சமீபத்தில் கூட அரிசி பற்றாக்குறை புகார் வந்தால், 24 மணி நேரத்தில் இதில் பறக்கும்படை ஆய்வு செய்ய வேண்டும். அரிசி திருடப்பட்டுள்ளதா என்பதை மண்டல அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் திருட்டுகளை தவிர்க்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் அரிசி மூட்டைகள், சர்க்கரை மூட்டைகள், பருப்பு பாக்கெட்டுகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசின் முத்திரை இடம்பெறும். அதற்கு மேலே க்யூ ஆர் கோடு இடம்பெறும். இந்த க்யூ ஆர் கோடு உள்ள மூட்டைகளை யாரும் வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாராவது திருடி வெளியே விற்றால் இதை வாங்க கூடாது.
தடுப்பு: அதோடு இதை விற்பவர்கள் பற்றி அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரிசி, நெல் திருட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜோலார்பேட்டையில் அரிசி கடத்த முயன்ற கும்பல் நேற்று கைதுசெய்யப்பட்டது .
போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், உஷாராணி ஆகியோர் மேற்கொண்ட ரோந்து பணியில் ரயிலில் அரிசி கொண்டி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசுக்கு கிடைத்த ரகசிய உளவு தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர்.
இதையடுத்து போலீசார் செய்த சோதனையில் மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ரேஷன் க்யூ ஆர் கோடு கொண்ட அரிசி கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 200 கிலோ அரிசியை பெங்களூருக்கு இவர்கள் கடத்தி உள்ளனர். இதை விசாரித்த போலீஸ், ரயிலில் வைத்து விஜய் என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். ரேஷன் கடைக்கு செல்ல வேண்டிய அரிசியை திருடி இவர் பெங்களூர் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.
இந்த நிலையில்தான் போலீசார் துரிதமாக செயல்பட்டு இவரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications