ஒரே நாளில்.. நடந்த சாதனையை பாருங்க.. தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகளே அசந்து போயிட்டாங்க.. சபாஷ் போலீஸ்
சென்னை: தமிழக போக்குவரத்து துறை ஒரே நாளில் காட்டிய அதிரடிகளை பார்த்து, வாகன ஓட்டிகள் அதிர்ந்து போனார்கள்.. என்ன நடந்தது ஒரே நாளில்?
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, விபத்து உயிரிழப்பு, வாகன நெரிசல் போன்றவற்றை முற்றிலும் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

வாகன ஓட்டிகள்: குறிப்பாக, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு, ஸ்பாட்டிலேயே அபராதம் விதிக்கப்படுகிறது. களத்தில் இருக்கும் போக்குவரத்து போலீஸார் கையடக்க கருவி மூலம் நேரடியாக அபராதம் விதித்து வருகிறார்கள்.
இதைத்தவிர, கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையிலும், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன..
களப்பணிகள்: மேலும், களப்பணியில் உள்ள போக்குவரத்து போலீஸார் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை தங்களது செல்போனில் படம் பிடித்து, அதன் மூலமும் அபராதம் விதிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட மேலாக, திடீர் திடீரென வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவது, பெருத்த பலனை தந்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளிடம் இருந்து, ஒரே நாளில் 2.39 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
லைசென்ஸ் இல்லை: சமீபத்தில், தமிழகத்தில், உரிமம் இல்லாத வாகனங்கள், வரி செலுத்தாத வாகனங்கள் அதிகம் இயக்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தது. அதனால், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளை, வாகன சோதனையில் இறங்கும்படி, தமிழக போக்குவரத்து துறை கமிஷனர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று முன்தினம், அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது, 11,023 வாகனங்கள் சோதிக்கப்பட்டதில், 2,406 வாகனங்கள், அதிக பாரம் ஏற்றியது, உரிமம் புதுப்பிக்காதது, உரிமம் முறைகேடு உள்ளிட்ட விதிமீறல்கள் செய்திருப்பது கண்டறியப்பட்டது.
புது திட்டம்: இந்த வாகனங்களுக்கு, எல்லாம் 28,49,315 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாம். இதைத்தவிர, 2 கோடியே, 11 லட்சத்து, 31,400 ரூபாய் வரியாக பெறப்பட்டு, இதற்கான ரசீதும் தரப்பட்டுள்ளது.. ஆக மொத்தம்,2.39 கோடி ரூபாய் அபராதம் மற்றும் வரி பெறப்பட உள்ளது. இனிமேல், தமிழகம் முழுவதும் இந்த திடீர் வாகன சோதனைகளில் அடிக்கடி ஈடுபட போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாம்.
-
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications