விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்?
சென்னை: திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இன்று ஏப்ரல் 4-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்வதாக தகவல் வெளியானது.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுடன் இணைந்து கட்சியின் மற்ற 7 வேட்பாளர்களும் இன்றைய நாளிலேயே மனுத் தாக்கல் செய்ய உள்ளதால் தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், திருமாவளவன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்யவில்லை என்றே தெரிகிறது.
2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தேர்வில் எவ்வித உள்நோக்கமும் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் தந்திருந்தார்..

கடந்த முறை சிறப்பாகப் பணியாற்றிய ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி உள்ளிட்டோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காதது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாக ரீதியான முடிவுகளே இதற்குக் காரணம் என்றும் கூறியிருந்தார்.
திருமாவளவன் காட்டுமன்னார்கோவில்
குறிப்பாக, நாகை தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்குச் சென்றது மற்றும் விருப்பப்பட்ட தொகுதிகள் கிடைக்காத சூழலிலேயே ஆளூர் ஷாநவாஸால் போட்டியிட முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், இது அவரைத் தடுக்கும் முயற்சி அல்ல என்று திட்டவட்டமாக கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் இது குறித்துத் தேவையில்லாத விவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன், வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.
8 விசிக வேட்பாளர்கள்
எனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று ஒரே நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாக, அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் அந்தந்த தொகுதிகளில் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்ய போவதாகவும் செய்திகள் பரபரத்தன.
இதில் குறிப்பாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று அவர் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை முறையாகச் சமர்ப்பிக்க உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து மற்ற 7 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்றைய தினமே மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
வேட்பு மனு தாக்கல் இல்லையா?
விசிக தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முடிவில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.. கூட்டணி கட்சித் தலைவர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தேர்தலில் போட்டியிடும் முடிவை அவர் தற்போது கைவிட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.
இதன் வெளிப்பாடாகவே, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் இன்று நடைபெறவிருந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்து.. திருமாவளவனுக்குப் பதிலாக, நெய்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற என்.எல்.சி ஊழியரான ராமசாமி என்கிற இளங்குமரன் விசிக வேட்பாளராகக் களம் இறக்கப்பட உள்ளதாகவும்,தான் போட்டியிடாதது குறித்தும், புதிய வேட்பாளர் அறிவிப்பு குறித்தும் இன்னும் சற்று நேரத்தில் திருமாவளவன் அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களிடம் விளக்க உள்ளதுகவும் செய்திகள் பரபரக்கின்றன
இதன் உறுதியான மற்றும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வராததால், தொண்டர்களும் குழப்பத்தில் உள்ளனராம்
தேமுதிக எப்போது மனு தாக்கல்?
புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டதன் மூலம் கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதாகவும், இந்தத் தேர்தல் முடிவு தமிழக அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஒருபுறம் வேட்புமனுத் தாக்கல் பணிகள் வேகமெடுக்க, மறுபுறம் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணங்களைத் தீவிரப்படுத்தவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது.
அதேபோல், கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர்கள் நாளை மறுநாள் அதாவது வரும் ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரே நாள்
நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒரு தினமே உள்ளது, இதையடுத்து முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட, சுயேட்சை வேட்பாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், சக்கரபாணி, டிஆர்பி ராஜா, நாசர் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சிந்தனைச் செல்வன், அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி, விசிக வேட்பாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் மொத்தமாக இதுவரை சட்டசபை தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.












Click it and Unblock the Notifications