பிக் பாஸ் 3: காம் டவுண் சொல்லியே கடுப்பேத்திய மீரா.. ஓவியாவாக மாறிய லாஸ்லியா.. கதறி அழுத ரேஷ்மா!
பிக் பாஸ் தமிழ் சீசன் 3ன் வீட்டில் மூன்றாவது நாள் என்ன நடந்தது என்று இங்கே காணலாம்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இரண்டாவது நாளில் ஏற்பட்ட மனக்கசப்பு, நேற்று கண்ணீர் கடலாக கன்டினியூ ஆனது என்றே சொல்லலாம். மூன்றாவது நாளிலேயே அந்த வீட்டில் சந்தோசத்தை பூதக்கண்ணாடி வைத்து தான் தேட வேண்டி இருந்தது. அந்தளவுக்கு ஆளாளுக்கு தங்கள் சோகத்தை கொட்டித் தீர்த்தனர்.
வேக்கப் சாங்காக மெர்சல் படத்தில் இடம்பெற்ற "அடிச்சு காலி பண்ணும்" பாடல் ஒலிபரப்பானது. அபிராமி, சாக்ஷி மற்றும் கவின் ஹாலில் படுத்திருந்தனர். அப்படியென்றால் இரவு அவர்கள் மீராவைப் பற்றி ஏதாவது புறணி பேசி இருக்க வேண்டும். அதை பிக் பாஸ் எடிட் செய்து விட்டார் போலும்.

போட்டியாளர்கள் எல்லோரும் உற்சாகமாகவே நடனமாடினார். ஆரஞ்சு கலர் பாவாடை கட்டிக் கொண்டு யாரது புது போட்டியாளரா என கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால், அட அது நம்ம பாத்திமா பாபு. புதிதாக வந்த மீரா நன்றாக நடனம் ஆடினார்.
இதையடுத்து தபால் பாக்ஸிற்கான பெல் அடிக்க, அதில் மோகன் வைத்யா வீட்டில் உள்ள அனைவருக்கும் குத்து டான்ஸ் கற்றுக் கொடுக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனை ஏற்று பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு மோகன் வைத்யா நடனம் கற்றுக் கொடுக்கிறார். அனைவரும் ஜாலியாக ஆடுகின்றனர். பின்னர் மதுமிதா தனது கணவருக்கு ஹேப்பி பர்த்டே கூறுகிறார்.

பின்னர் ஹாலில் இருந்த கீரை கப்பை எடுத்துக் காட்டி, அதை யார் இங்கே வைத்தது என விசாரிக்கிறார். அப்போது புதிய பிரச்சினைக்கு வெல்கம் சொல்கிறார் அபிராமி. அப்போது வாண்டடாக வண்டியில் ஏறும் மீரா, அபிராமிக்கு காம் டவுண் சொல்கிறார். இதனால் மீராவிற்கும், அபிராமிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது நாம் டிரெய்லரில் பார்த்த காட்சிப்படி'உன்கிட்ட பேசப் பிடிக்கவில்லை' என்று அபிராமி கிளம்பிச் செல்கிறார்.
அபிராமியோ, மீராவோ அல்லது வேறு போட்டியாளர்களோ என யாருமே புகார் கூறாவிட்டாலும், நாட்டாமை மகள் வனிதா, தானாக பிரச்சினைக்கு ஒரு தீர்ப்பு சொல்வதாக காட்சிக்குள் வருகிறார். அப்போது அவரையும், 'காம் டவுண்' சொல்லியே கடுப்பேத்துகிறார் மீரா. திரும்பத் திரும்ப சொல்ற நீ என்ற வடிவேல் பட டயலாக் ரேஞ்சுக்கு வனிதா சொல்வதற்கெல்லாம், 'காம் டவுண்' என்ற ஒத்த வார்த்தையிலேயே கோபத்தை மூட்டுகிறார்.


சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, மீரா ஒருபுறம் அழ, அபிராமி மறுபுறம் அழ என ஆளாளுக்கு பீல் பண்ணுகின்றனர். மீராவை பாத்திமா பாபுவும், அபிராமியை வனிதாவும் சமாதானம் செய்கின்றனர். அப்போது அபியை சமாதானப்படுத்த கவின் வருகிறார். இதனால் சோகக் காட்சி கலகலப்பாகிறது.
அதனைத் தொடர்ந்து, சொகுசு பட்ஜெட்டிற்கான அறிவிப்பு செய்கிறார் பிக் பாஸ். டாஸ்க் ரூமில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்க, ஒவ்வொருவராக எழுந்து சென்று அங்குள்ள குவளையில் இருந்து மூன்று சீட்டுகளை எடுத்து, அதில் எழுதியுள்ள படி செய்ய வேண்டும் என்பது தான் அந்த டாஸ்க்.

ஏற்கனவே, மோகன் வைத்யா பிக் பாஸ் வீட்டில் அழுது தனது சோகக் கதையைக் கொஞ்சம் சொல்லியுள்ளதால், அவரையே முதல் ஆளாக்குகிறார் பிக் பாஸ். அவரும் தன் மாற்றுத்திறனாளி மனைவி மற்றும் மகன் பற்றி உருக்கமாகப் பேசி அனைவரையும் அழ வைத்தார். அதையடுத்து ரேஷ்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரும் தனது வாழ்வில் நடந்த சோக சம்பவங்கள் பற்றி பேசினார். இன்றைக்கு போட்டியாளர்களை அழ வைத்தது போதும் என நினைத்தார் போலும், அடுத்ததாக ஷெரீனுக்கும், அபிராமிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே ஓவியா மாதிரியே லாஸ்லியாவும் கேமரா முன் நின்று கொஞ்ச நேரம் பாடிக் காட்டினார். பின்னர் 'ஸ்பிரே அடிச்சுப் புடுவேன்' மாதிரி, கண்டது போதும் என இலங்கைத் தமிழில் கதைத்தார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டின் மூன்றாம் நாள் நிறைய அழுகை, சோகம், சண்டை, கொஞ்சமாய் காதல், சிரிப்பு என கலவையாக முடிந்தது. எப்படியும் நான்காம் நாளில் சேரன், வனிதா, பாத்திமா பாபு, சரவணன் போன்றோர் டாஸ்க்கில் பேசுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications