ஸ்டார்ட்டிங்கே எமோஷனல்.. "ரொம்ப அதிர்ச்சி.. அவர் என் பக்கத்துல காணோம்".. கலங்கிய பாவனி: பிக் பாஸ் 5
பிக் பாஸ் போட்டியாளர் நடிகை பாவனி உருக்கமாக பேசியிருந்தார்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பாவனி பங்கேற்றுள்ள நிலையில், அவரது அறிமுக பேச்சு, ரசிகர்களை உருக வைத்துள்ளது.
"சின்னதம்பி" சீரியலின் மூலம் தமிழக மக்களின் மனதில் பதிந்தவர் பவானி ரெட்டி... இதன்மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் உருவானார்கள்.. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பேஜ்களும் அதிகமாயின.. ஹைதராபாத்தை சேர்ந்த பெண்.. பேஷன் டிசைனிங் படித்துள்ளார். மாடலிங் செய்து வந்தார்..
சீரியலில் நடித்து கொண்டிருந்தபோதே பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.. ஆனால், திடீரென ஒருநாள் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்..
சீரியல் சின்னத்திரை உலகில் இந்த தற்கொலை பரபரப்பாக பேசப்பட்டது.. பிரதீப் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று காரணமே தெரியவில்லை.. ஒருவேளை தம்பதிக்குள் ஏதாவது பிரச்சனையா? பாவனியால் கணவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பன போன்ற சந்தேகங்களையும் மீடியா உலகம் கிளப்பிவிட்டது.

பேட்டி
இதையடுத்து அடுத்த சில வாரங்களில் பாவனி ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "நாங்க 2 பேரும் நண்பர்களாகத்தான் திருமணத்துக்கு பின்பும் இருந்தோம்.. ஆனா ஒருநாள் காலையில் எழுந்து பார்க்கிறப்ப, அவர் என் பக்கத்துல இல்லை... தற்கொலை பண்ணிக்கிட்டார். கூடப் பழகி, சிரிச்சு, நேசிச்ச ஒருத்தர் என் கண் முன்னால் உயிரோட இல்லைங்கிறதை மனசு நம்பவே இல்லை... மத்தவங்களைவிட எனக்குத்தான் அதிர்ச்சி.

காரணம்
ஆனால் கூட இருந்தவங்க எல்லாம் அவர் இறப்புக்குச் சொன்ன காரணம் நான்தான் என்று சொன்னது என்னை இன்னும் அதிகமா பாதிச்சது... ரொம்ப வலிச்சது... நானும் அவரும் எவ்வளவு அன்னியோன்யமா இருந்தோம்னு மத்தவங்ககிட்ட என்னால எப்படிப் புரியவைக்க முடியும்? அவரோட இறப்பை என்னால மறக்கவும் முடியலை, அந்த வலியிலேருந்து மீளவும் முடியலை... என்னுடைய வலி எனக்குத்தான் தெரியும்... அவர் இறந்து கொஞ்ச மாசத்திலேயே நான் நடிக்க வந்துட்டேன்னு எல்லாரும் பேசுனாங்க.. நடிப்பு என்னுடைய தொழில்...

தனித்துவம்
நான் சின்னப் பொண்ணு இல்ல. அம்மா, அப்பாவோட சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடுறதுல எனக்கு உடன்பாடு இல்ல" என்று கூறியிருந்தார். இதற்கு பிறகுதான் பாவனி மீதான வருத்தங்களும், பரிதாபங்களும் அதிகமானது.. பாவனிக்காகவே சின்னதம்பி சீரியலும் ஹிட் ஆனது.. இந்நிலையில்தான், பிக் பாஸ் 5ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் பாவனி.. நேற்றைய தினம் அறிமுக நிகழ்ச்சியிலும் தன்னுடைய மனக்குமுறலை பாவனி கொட்டினார்..

திருமணம்
அந்த வீடியோவில், "23 வயதில் நான் திருமணம் செய்து கொண்டு மனைவியாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன்... கணவர் வேலைக்கு போனால் நான் சமைத்து குழந்தைகளை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன்.. அதேசமயம், வேலைக்கும் சென்று என் சொந்த உழைப்பில் இருக்க வேண்டும் என்றும் நினைத்தேன். கல்யாணமும் ஆனது.. எல்லாம் நல்லாதான் போய்க்கொண்டிருந்தது... நான் ஒரு விஷயத்திற்காக காத்திருந்தபோது, எதிர்பார்க்காத அந்த விஷயம் நடந்துவிட்டது.

தற்கொலை
என் கணவர் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் இன்னொருவரை குற்றம் சொல்வார்கள்... இவங்க எதோ பண்ணிருப்பாங்க என்றுதான் சொல்வாங்க... என்ன நடந்தது என்று யாருமே கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்கள்... எனக்கு பெரிய இழப்பு இது. அந்த வலியுடன் தான் நான் இப்போவரை பயணித்து கொண்டிருக்கிறேன்.. என் கணவரின் குடும்பத்தினர் தான் இங்கே பிக்பாஸ் வரும் வரை ஆதரவாக இருக்கிறார்கள்" என்றார்.

எமோஷனல்
திருமண வாழ்க்கை வாழ நான் கொடுத்துவைக்கவில்லை.. எனக்கு ராசியில்லை என நினைக்கிறேன்... இப்போ என்ன வந்தாலும் எனக்கு பரவாயில்லை. கணவரின் குடும்பத்தினர் தான் எனக்கு பெரிய சப்போர்ட்.. அதனாலதான் பிக்பாஸ் வரை வர முடிந்தது" என்று உருக்கமாக பேசினார்.. ஏற்கனவே பாவனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், பிக்பாஸ் முதல்நாளிலேயே எமோஷனலாக பேசியது அவரது ரசிகர்களின் ஆதரவை மேலும் பெற்று வருகிறது.. எனினும், பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் எப்படி இருக்க போகிறது? எப்படி விளையாட போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications